»   »  வாரிசு நடிகரை லவ்வும் மயிலு மகள்: கொலவெறியில் அண்ணன் நடிகர்

வாரிசு நடிகரை லவ்வும் மயிலு மகள்: கொலவெறியில் அண்ணன் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷானை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிகையாக உள்ளார். அவரை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

பொது இடங்களில் சுற்ற வேண்டாம் என்று ஜான்விக்கு கரண் கன்டிஷன் போட்டுள்ளாராம்.

காதல்

காதல்

ஜான்வியும், நடிகர் இஷான் கட்டாரும் காதலிக்கிறார்களாம். இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றுகிறார்களாம். இது இஷானின் அண்ணனும் பாலிவுட் நடிகருமான ஷாஹித் கபூருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இஷான் பியான்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். முதல் படம் வெளியாக உள்ள நேரத்தில் அவர் ஜான்வியுடன் ஊர் சுற்றி பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஷாஹித் எச்சரித்துள்ளாராம்.

இஷான்

இஷான்

ஷாஹித் கபூர் தனது தம்பி இஷானை நேரில் அழைத்து பேசினாராம். படம் ரிலீஸாகும் நேரத்தில் ஜான்வியுடன் சுற்றினால் படத்தை விட்டுவிட்டு காதல் பற்றி அனைவரும் பேசுவார்கள். இது உனது எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என ஷாஹித் தெரிவித்தாராம்.

ஜான்வி

ஜான்வி

ஜான்வி முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்தார். இருவரும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி தீயாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sridevi's daughter Jhanvi Kapoor being hush-hush about dating Shahid Kapoor's brother Ishaan. Ishaan's doting brother Shahid isn't very pleased with these linkup news doing the rounds, ahead of Ishaan's film debut.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil