அடி தூள்… அட்லீ, ஷாருக்கான் படத்தின் டைட்டில் இதுதான்…கசிந்தது தகவல் !
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அட்லி இணையும் படத்தின் தலைப்பு மாஸான அறிவிப்பு என பாலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.
அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்,

ராஜா ராணி
சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்றார் அட்லி.

தெறி செம ஹிட்டு
ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். தெறி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து திரையில் தெறிக்கவிட்டு, வசூலைவாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து, மெர்சல், பிகில் என அடுத்துத்து விஜய்யை வைத்து படங்களை இயக்கினார்.

அட்லி ஷாருக்கான்
அட்லி ஷாருக்கானை வைத்து படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேரடியாக புனேவில் தொடங்கியது. இந்தப் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார். படப்பிடிப்புதளத்தில் நடிகை ப்ரியாமணியும் காணப்பட்டதால், அவரும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

படத்தின் தலைப்பு
இப்படத்தின் தலைப்பு பற்றி ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளது. அதில் இந்த படத்திற்கு "Lion" என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அனுமதி கடிதத்தில் இருந்து இந்த தகவல் வெளியாகி உள்ளது. தலைப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பே எது தலைப்பு என்று நம்பப்படும்.

இருவேடத்தில்
ஷாருக்கான் இப்படத்தில் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரம் ராணுவ அதிகாரி எனவும் கூறப்படுகிறது. இதனால் தான் படத்தின் தலைப்பு Lion என்று வைக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விரைவில் அறிவிப்பு
படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதுவரை அட்லி இயக்கியப் படங்களில் இதுவே அதிக பொருட்செலவில் தயாராகும் படமாகும்.


Click it and Unblock the Notifications











