கமல், ஷாருக் கான் முன்னிலையில் சூர்யாவின் அஞ்சான் டீசர்
சென்னை: சூர்யா நடித்த அஞ்சான் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் 'அஞ்சான்'. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.

விஜய் விருது விழாவில்
விஜய் தொலைக்காட்சியின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்றும் இந்த விழாவில் அஞ்சான் படத்தின் டீசர் வெளியாகும் என யுடிவியின் தனஞ்ஜெயன் கோவிந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

கமல், ஷாருக்
இந்த விருதுகள் வழங்கும் விழாவில் கமல்ஹாசன், ஷாருக்கான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர். அவர்கள் முன்னிலையில் சூர்யாவின் அஞ்சான் டீசர் வெளியாக உள்ளது.

10 மணிக்கு யு டியூப்பில்
இதனிடையே இன்று இரவு பத்துமணிக்கு யுடியூப்பில் அஞ்சான் டீசர் வெளியிடப்பட உள்ளது.

ஆடியோ ரிலீஸ்
அஞ்சான் படத்தின் ஆடியோ ரிலீஸ் இம்மாதம் 17ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக உள்ளன. அஞ்சான் படத்தின் மூலம் சூர்யா பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கம் 2 போல வருமா?
கடந்த வருடம் இதே தேதியில் சூர்யாவின் ‘சிங்கம்-2' ரிலீஸ் ஆகி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே அஞ்சான் படத்தின் டீசர் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications