twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் ஷாருக்குக்கு மம்தா பானர்ஜி கொடுத்த “மீன்வறுவல்” விருந்து

    |

    Shahrukh Khan and Mamata Banerjee bond over KKR's victory and delicious fish fry
    கொல்கத்தா: கொல்கத்தா அணியின் வெற்றியை தொடர்து மம்தா பானர்ஜியை சந்தித்த ஷாருக்கான் அவரது வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்டுள்ளார் இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக.

    ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக இருக்கிறார். இந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இதையடுத்து ஷாருக்கான் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டுக்கு சென்றார். அங்கு மம்தாவை சந்தித்து பேசினார். அப்போது, ஷாருக்கானுக்கு இறுதி போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வாழ்த்து கூறினார்.

    பின்னர், ஷாருக்கானுக்கு மம்தா பானர்ஜி விருந்து கொடுத்தார். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட வறுவல் மீனை சாப்பிட கொடுத்தார். விருந்து குறித்து ஷாருக்கான் டுவிட்டரில் கூறும்போது, ''மம்தா பானர்ஜி வீட்டில் மீன்வறுவல் சாப்பிட்டது இனிமையாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.

    மேலும், மம்தா பானர்ஜி பேஸ் புக்கில், ''கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டியில் வெல்ல வேண்டும். அதற்காக என் வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ளார்.

    English summary
    Shah Rukh Khan and West Bengal Chief Minister Mamata Banerjee on Thursday celebrated Kolkata Knight Rider’s entry into the finals. SRK who had missed other matches of KKR rushed to Banerjee's residence at Harish Chatterjee street to enjoy the KKR's victory over Kings XI Punjab at Eden Gardens.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X