நாலா பக்கமும் வசூல் கொட்டுது .. பாகுபலி 2 சாதனையை முறியடித்தது பதான்!
மும்பை : பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்த பதான் இந்தி படம் பாகுபலி 2 இந்தி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
ஷாருக்கான் 2018ம் ஆண்டு ஜூரோ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிசில் நன்றாக கல்லாக்கட்டி வருகிறது
ஜூரோ திரைப்படத்தைத் தொடர்ந்து rocketry: The Nambi Effect, Laal Singh Chaddha, Brahmāstra போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பதான் படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.

பதான்
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, சல்மான் கான், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடி ஆகியோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பான் இந்திய திரைப்படமாக இப்படம், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான நல்ல விமர்சனங்களை பெற்றது.

காவி நிற சர்ச்சை
இப்படம் வெளியாவதற்கு முன்னரே தீபிகா படுகோனின் காவி நிற பிகினியால் பெரும் சர்ச்சை உருவானது. பதான் படத்தில் இருந்து அந்த காட்சி நீங்கப்பட வேண்டும் என்றும், அந்த காட்சி நீக்காவிட்டால், பதான் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை அடித்து நொறுக்குவோம் என அமைப்புகள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

நாலா பக்கமும் வசூல் மழை
பல சர்ச்சைகள், பல போராட்டங்கள் வந்த போதும் பதான் திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் இமாலய சாதனையை படைத்து, பதான் படம் ரூ.1000 கோடி வசூலை குவித்துள்ளது. முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூலை அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் முன்னேற்றத்தைக் கண்டது.

சாதனையை முறியடித்தது பதான்
இந்நிலையில், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான பாகுபலி 2 இந்தி திரைப்படம் ரூ.510.66 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது. தற்போது இந்த சாதனையை பதான் திரைப்படம் முறியடித்துள்ளது. இதனால், பதான் படக்குழு அளவில்லாத மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜவான்
பதான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











