Jawan - ஜவானே கடைசி.. பாலிவுட் பாஷா ஷாருக்கான் எடுத்திருக்கும் அதிரடி முடிவு

மும்பை: Jawan (ஜவான்) ஜவான் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட ஷாருக்கான் தான் எடுத்திருக்கும் புதிய முடிவு குறித்து பேசியிருக்கிறார்.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜாராணி படத்தை முதன்முதலில் இயக்கினார். ஆர்யா, நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் பிகிலை தவிர மற்ற இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி விஜய்யுடன் அவருக்கு நல்ல கெமிஸ்ட்ரியும் உருவாகிவிட்டது.

Shahrukh Khan Speks in Jawan Promotion at Dubai Burj Khalifa

ஹிந்தியில் அட்லீ: சூழல் இப்படி இருக்க அட்லீ தனது ஐந்தாவது படத்தையும் விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து இயக்க கமிட்டாகிவிட்டார். படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்டோ நடித்திருக்கின்றனர். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்: யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சென்னையில் நடந்தது. இதில் ஷாருக்கான் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். குறிப்பாக ஷாருக்கான் அனிருத்துடன் இணைந்து மேடையில் நடனமாடியது ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. மேலும் சென்னையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டை நடத்தியதன் மூலம் தமிழ்நாடு ரசிகர்களின் கவனத்தை ஜவான் படத்தின் மீது திருப்பியிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டிலும் படத்தின் வசூல் நல்லபடியாக இருக்கும் என படக்குழு நம்பியிருக்கிறது.

சூப்பர் ட்ரெய்லர்: ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடந்து முடிந்த பிறகு ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரை பார்க்கும்போது படத்தில் ஷாருக்கான் பல்வேறு கெட் அப்புகளில் வருவது உறுதியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி கண்டிப்பாக இந்தப் படம் பந்தயம் அடித்து பாலிவுட்டிலும் அட்லீ பெரிய ரவுண்டு வருவார் என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

புர்ஜ் கலிஃபாவில் ட்ரெய்லர்: இந்நிலையில் துபாயில் இருக்கும் உலகின் உயரமான கட்டமான புர்ஜ் கலிஃபாவில் ஜவான் படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்வின்போது ஷாருக்கான், அட்லீ, அனிருத் உள்ளிட்டோர் அங்கு இருந்தனர். இதனையடுத்து பேசிய ஷாருக்கான், "ஜவான் படத்துக்காக மொட்டை அடித்தேன். இனி எந்தப் படத்துக்கும் மொட்டை அடிக்கமாட்டேன். ஜவானே கடைசி" என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக ஜவானில் ஷாருக்கானின் கெட் அப்பை பார்த்த ரசிகர்கள் இதுவரை ஷாருக்கானை இப்படி பார்த்ததே இல்லை என ஆச்சரியப்பட்டனர். அதுமட்டுமின்றி படத்தில் ஷாருக்கான் நெகட்டிவ் ஷேடில் வருவார் என்பதால் படத்தை பார்க்க ஆவல் அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X