ஷாருக்கானின் நெக்ஸ்ட் மூவி.. அட்லியின் மாஸ்டர் பிளான் கசிந்தது!

சென்னை : நடிகர் விஜய்யை எந்தெந்த கோணங்களில் எல்லாம் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்களோ அதை எல்லாம் திரையில் செய்து காட்டியவர் இயக்குனர் அட்லி.

தமிழில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் இவர் தனது முதல் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து விஜய் திரைப்படங்களை மட்டுமே இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தமிழில் மீண்டும் விஜய்யை வைத்து இயக்குவார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது ஹாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜனரஞ்சகமான ஆக்சன் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் அதில் ஷாருக்கான் இரு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

விரல் விட்டு

விரல் விட்டு

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள இளம் இயக்குநர்களில் தொடர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அதில் ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை சரியாக புரிந்து கொண்டவர் இயக்குனர் அட்லி.

பாலிவுட் வரை உயர்ந்துள்ளது

பாலிவுட் வரை உயர்ந்துள்ளது

தனது முதல் திரைப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து விஜய்யுடன் பணியாற்றிவரும் அட்லி தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராகவும் வெற்றி இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என இவர் இயக்கிய நான்கு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளிய நிலையில் இவரது மார்க்கெட் இன்று பாலிவுட் வரை உயர்ந்துள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல்கள்

அதிகாரப்பூர்வ தகவல்கள்

தொடர்ந்து நான்கு தமிழ் திரைப்படங்களை இயக்கி வசூல் மழையை பொழிய வைத்து பாக்ஸ் ஆபீசை கலக்கிய அட்லி இப்பொழுது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் சில நாள்களுக்கு முன்பு வெளியானது.

மாஸான அப்டேட்

மாஸான அப்டேட்

இவ்வாறு அட்லி, ஷாருக்கான் முதல் முறையாக இணையும் திரைப்படத்தின் கதையில் ஷாருக்கானின் வேடம் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் இப்பொழுது மாஸான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

செய்திகள் கசிந்துள்ளன

செய்திகள் கசிந்துள்ளன

அதாவது அட்லி இயக்கப்போகும் பாலிவுட் திரைப்படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒரு வேடம் டிடெக்டிவ் போலீஸ் அதிகாரி எனவும் மற்றொரு ஷாருக்கானின் வேடம் கிரிமினல் எனவும் செய்திகள் கசிந்துள்ளன.

வசூல் சாதனைகளை

வசூல் சாதனைகளை

இவ்வாறு தான் இயக்க இருக்கும் முதல் பாலிவுட் திரைப்படத்திலேயே அதிரடி காட்ட காத்துக்கொண்டிருக்கும் அட்லி கமர்சியல் திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வாறு இவர் இயக்கும் திரைப்படங்கள் கமர்ஷியலாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது ஷாருக்கான் நடிப்பில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஷாருக்கான் நடிக்க இருக்கின்ற நிலையில் இந்தத் திரைப்படமும் கட்டாயம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பல்வேறு வசூல் சாதனைகளைப் புரியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஷாருக்கானுக்கு வில்லன் ஷாருக்கானே

ஷாருக்கானுக்கு வில்லன் ஷாருக்கானே

மேலும் ஷாருக்கான் இதுவரை பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இப்பொழுது வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரங்களில் அதிரடியான சேசிங் களத்தில் ஷாருக்கானுக்கு வில்லன் ஷாருக்கானே என்றவாறு உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் மேலும் பல அப்டேட்களை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X