'சவுந்தர்யாஜி.. சென்னைக்கு வர்றேன்.. லுங்கி டான்ஸ் ஆடறேன்!' - ஷாரூக்

By Shankar

சென்னை: சவுந்தர்யாஜி, நீங்கள் அழைத்ததற்காக நிச்சயம் நாளை மறுநாள் நான் சென்னை வருகிறேன். கோச்சடையான் இசை விழாவில் லுங்கி டான்ஸ் ஆடுகிறேன், என்று ஷாரூக்கான் கூறியுள்ளார்.

கோச்சடையான் படத்தின் இசைவெளியீடு நாளை மறுநாள் சத்யம் அரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

இந்த விழாவில் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை வரவேற்று கவுரவிக்கிறார்,

ஷாரூக்கான்

ஷாரூக்கான்

தன் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வகையில் ரஜினியின் பெயரை, படத்தை அல்லது காட்சியை வைப்பது ஷாரூக்கானின் சமீபத்திய வழக்கம். இதை ரஜினிக்கு தான் செலுத்தும் மரியாதை என அவர் கூறினாலும், மற்றவர்கள் அதை பப்ளிசிட்டி என்று கூறி வருகின்றனர்.

லுங்கி டான்ஸ்

லுங்கி டான்ஸ்

ரா ஒன்னில் ரஜினியை ஒரு காட்சியில் இடம் பெற வைத்தவர், அடுத்த படமான சென்னை எக்ஸ்பிரஸில் ரஜினிக்கு மரியாதை என்ற தலைப்பில் லுங்கி டான்ஸ் பாடலை இடம்பெற வைத்தார். அந்தப் பாடலுக்கு நாடு முழுவதுமே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அழைப்பு

அழைப்பு

இந்த நிலையில் ஷாரூக்கானை கோச்சடையான் இசைவெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார் சவுந்தர்யா. தமிழகத்தில் பெரிய வரவேற்புள்ள இந்தி நடிகர்களில் முதலிடம் ஷாரூக்கானுக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வர்றேன் சவுந்தர்யாஜி

சென்னை வர்றேன் சவுந்தர்யாஜி

அதற்கு உடனே பதிலளித்த ஷாரூக்கான், "சவுந்தர்யா ஜி, உங்களுக்காக நிச்சயம் நான் சென்னை வருகிறேன். லுங்கி டான்ஸ் ஆடுகிறேன் ஹாஹா.. அப்பாவிடம் என் அன்பையும் விசாரிப்புகளையும் தெரிவிக்கவும்," என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X