»   »  அதிக வருமானம்... ஃபோர்ப்ஸ் லிஸ்டில் ஷாருகான், சல்மான் கான், அக்ஷய்!

அதிக வருமானம்... ஃபோர்ப்ஸ் லிஸ்டில் ஷாருகான், சல்மான் கான், அக்ஷய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்வதேச அளவில் கடந்த ஓர் ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் 100 நட்சத்திரங்கள் குறித்த பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது அதில் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அக்ஷய்குமார் போன்றோர் முன்னிலையில் உள்ளனர்.

பல்வேறு வருவாய் வழிகள் மூலம் பிரபலங்கள் சம்பாதித்த வருமானத்தில் அடிப்படையில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் வெளியிடுகிறது.

ஷாருக்

ஷாருக்

இந்திய அளவில் முதல் இடத்தில உள்ள ஷாருக் கான், ரூ. 245 கோடி வருவாய் ஈட்டி சர்வதேச அளவில் 65 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சல்மான்கான்

சல்மான்கான்

சல்மான் கான் ரூ. 238 கோடி ஈட்டி சர்வதேச அளவில் 71-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அக்ஷய்

அக்ஷய்

அக்ஷய் குமார் சர்வதேச பட்டியலில் 80வது இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு, 2015ம் ஆண்டு வெளியான ஃபோர்ப்ஸ் பட்டியலில், அக்ஷய் குமார் 76வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலிடம்

முதலிடம்

அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி, டெய்லர் ஸ்விஃப்ட் 17 கோடி டாலர்கள் சம்பாதித்து, முதலிடம் பிடித்துள்ளார். அதற்கடுத்த இடங்களில், ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் பேட்டர்சன், கிறிஸ்டியானா ரொனால்டோ, லீப்ரான் ஜேம்ஸ், மடோனா, ஜாக்கி சான், மல்யுத்த வீரரும், நடிகருமான தி ராக் என அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் உள்ளிட்டோர் அதிக வருமானம் ஈட்டும் நட்சத்திரங்களாக உள்ளனர்.

English summary
Shahrukh khan, Salman Khan, Akshay Kumar have got a place in Forbes top 100 list.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil