Shaitaan Trailer: சந்திரமுகி ஸ்டைலில் கம்பேக் கொடுக்கும் ஜோதிகா.. மிரள வைக்கும் சைத்தான் ட்ரெய்லர்!

சென்னை: சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார் ஜோதிகா. ஆனால் தற்போது குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் ஜோதிகா தனது நடிப்பில் மிரட்டி வருகிறார். இந்நிலையில் இந்தியில் உருவாகியுள்ள சைத்தான் திரைப்படம் மூலம் மீண்டும் சந்திரமுகி போல கம்பேக் கொடுக்கவுள்ளார் ஜோதிகா.

வெளியானது சைத்தான் ட்ரெய்லர்
இந்தியில் விகாஸ் பால் இயக்கியுள்ள சைத்தான் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா, ஜான்கி போடிவாலா ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பாலிவுட் ரசிகர்களை மிரட்டியுள்ளது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள சைத்தான் படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிரள வைக்கும் என்பதை இந்த ட்ரெய்லர் உறுதி செய்துள்ளது.

 Shaitaan Trailer: Ajay Devgn, Madhavan, Jyotika starrer Shaitaan trailer released

அஜய் தேவ்கன், ஜோதிகா இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வீட்டில் திடீரென என்ட்ரியாகும் மாதவன் அஜய் தேவ்கன், ஜோதிகா ஆகியோரின் மகளை ஹிப்னாடிஸம் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறார். மாதவனை வீட்டை விட்டு விரட்டிவிட அஜய் தேவ்கன் முயற்சிக்க, அதற்கு அவரது மகள் தடையாக நிற்கிறார்.

 Shaitaan Trailer: Ajay Devgn, Madhavan, Jyotika starrer Shaitaan trailer released

அதுமட்டும் இல்லாமல் மாதவன் எது சொன்னாலும் அதனை செய்யும் அவர், ஒருகட்டத்தில் சைக்கோ மாதிரியான மனநிலையில் மிரட்டுகிறார். அதேபோல் மாதவன், ஜோதிகா ஆகியோரும் சைத்தான் ட்ரெய்லரில் ரசிகர்களை மிரள வைத்துள்ளனர். ட்ரெய்லரே இப்படி என்றால் படம் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தியில் மட்டுமே ரிலீஸாகும் சைத்தான் படத்திற்கு மற்ற மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

சைத்தான் ட்ரெய்லர் ஆரம்பம் முதல் இறுதிவரை எப்படி மிரட்டலாக இருந்ததோ, அதனைவிட படம் படு பயங்கரமாக இருக்கும் என்றே பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சைத்தான் திரைப்படம் மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல் சைத்தான் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அவரது ஆல்டைம் பேவரைட். அந்த வரிசையில் சைத்தான் படத்திலும் ஜோதிகாவின் நடிப்பு தரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக அஜய் தேவ்கன், ஜோதிகா ஆகியோரது மகளாக நடித்துள்ள ஜான்கி போடிவாலா சைக்கோத்தனமான நடிப்பில் மிரட்டியுள்ளார். இதனால் மார்ச் 8ம் தேதி வெளியாகவுள்ள சைத்தான் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X