Don't Miss!
- Finance
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT, RTGS வசதி? செய்வது எப்படி?
- News
8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் - ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம்
- Sports
வாட்ச்-க்கு ஆசைப்பட்டு ரூ.2.5 கோடி அபேஸ்.. மோசடி வழக்கில் ரிஷப் பண்ட்.. அப்படி என்ன நடந்தது!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!
- Technology
ஒப்போ ரெனோ 8 ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ , ரெனோ 8 அறிமுகம்: வெவ்வேறு ரகம், விதவிதமான விலை- ஆரம்ப விலை!
- Lifestyle
முகத்தில் உள்ள அழுக்கை நீக்க சோப்பிற்கு பதிலாக இத யூஸ் பண்ணுங்க... சீக்கிரம் வெள்ளையாவீங்க...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஷாஜகான் படத்தில் நடித்த நடிகருக்கே கெட் அவுட்டா? விஜய் வீட்டுக்கு போனவருக்கு இதுதான் நிலைமையா?
சென்னை: ஷாஜகான் படத்தில் இன்னொரு ஹீரோவாகவே நடித்த நடிகரை விஜய் வீட்டிற்குள் சேர்க்கவே இல்லை என்பதை அந்த நடிகரே கூறியிருப்பது பகீரை கிளப்பி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
அஜித், விஜய் சாதிக்க முடியாததை சாதித்த சிவகார்த்திகேயன்.. வெற்றி பாதைக்கு திரும்புமா கோலிவுட்?

ஷாஜகான் நடிகர்
இயக்குநர் கே.எஸ். ரவி இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான ஷாஜகான் படத்தில் இன்னொரு ஹீரோவாகவே நடித்திருப்பார் நடிகர் கிருஷ்ணா திவாகர். ஹீரோயின் ரிச்சா பாலோட் கடைசியில் விஜய்யை விரும்பவில்லை நடிகர் கிருஷ்ணா திவாகரைத் தான் விரும்புகிறார் என்பதை தெரிந்ததும் உடைந்து போகும் விஜய் தனது காதலியின் காதலை சேர்த்து வைப்பது போல அந்த படத்தை இயக்குநர் காதலுடன் கலந்து உருவாக்கி இருப்பார்.

நடிக்கவில்லை
ஆனால், ஷாஜகான் படத்திற்கு பிறகு கிருஷ்ணா திவாகர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்தி விட்டேன் என்றும் சமீப காலமாக மலையாள படங்களில் நடித்து வருகிறேன் என்றும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது. மேலும், அதில், விஜய் வீட்டுக்கு போய் அங்கே அவருக்கு ஏற்பட்ட அந்த மோசமான அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் வீட்டில் அனுமதிக்கவில்லை
மலையாளத்தில் கிடைப்பதை போல தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால், நடிகர் விஜய்யை சந்திக்கலாம் என நினைத்து அவரது வீட்டுக்கு சென்றேன். ஆனால், விஜய்யின் வீட்டில் தன்னை அனுமதிக்கவில்லை என விரக்தியடைந்த நிலையில், ஷாஜகான் நடிகர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

இப்போ அவரு பீஸ்ட் விஜய்
நடிகர் விஜய்யின் வீட்டுக்கு சென்ற போது, அவரது செக்யூரிட்டியிடம் நான் ஷாஜகான் படத்தில் நடித்தவர் விஜய்யை சந்திக்க அனுமதி கிடைக்குமா? எனக் கேட்டேன். அதற்கு அந்த செக்யூரிட்டி அவர் இப்போ பீஸ்ட் விஜய் எனக் கூறி தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார் எனக் கூறியுள்ளார். எப்படியாவது விரைவில் நடிகர் விஜய்யை சந்திப்பேன் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மேலும், கூடிய சீக்கிரம் தமிழிலும் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.