ஆச்சார்யா ரவி மறைவிற்கு அழ்ந்த இரங்கல்... அறிக்கை வெளியிட்டு குழப்பத்தை தீர்த்த ஷாஜகான் இயக்குநர்!

சென்னை: இயக்குநர் ஆச்சார்யா ரவி மறைவால் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து ஷாஜகான் பட இயக்குநர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

'சேது' திரைப்படத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ரவி. இவர் விக்னேஷ் நடிப்பில் வெளியான 'ஆச்சார்யா' படத்தை இயக்கினார்.

இதனை தொடர்ந்து ஆச்சார்யா ரவி என்று அறியப்பட்டு வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆச்சார்யா ரவி மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

ஷாஜகான் பட இயக்குநர்?

ஷாஜகான் பட இயக்குநர்?

அவரது மறைவு குறித்த செய்தி ஊடகங்களிலும் வெளியானது. சில ஊடகங்கள் மறைந்த ஆச்சார்யா ரவி விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தை இயக்கியவர் என்றும் குறிப்பிட்டிருந்தன. இன்னும் சில ஊடகங்கள் ஷாஜகான் பட இயக்குனர் ரவி காலமானார் என்றும் செய்தி வெளியிட்டன.

பெயரால் ஏற்பட்ட குழப்பம்

பெயரால் ஏற்பட்ட குழப்பம்

இருவரின் பெயரும் ரவி என்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், ஷாஜகான் பட இயக்குனர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம், நான் விஜய் சாரை வைத்து 'ஷாஜகான்' படத்தை இயக்கிய ரவி.

ரவி மறைவுக்கு இரங்கல்

ரவி மறைவுக்கு இரங்கல்

நண்பர் ஆச்சார்யா பட இயக்குனர் ரவி மரணம் அறிந்து அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

கதை விவாதத்தில்...

கதை விவாதத்தில்...

மறைந்த இயக்குநர் ஆச்சார்யா ரவி, ஆச்சார்யா படத்திற்கு பிறகு 'என்னதான் பேசுவதோ' படத்தை இயக்கினார். இப்படம் ரிலீஸ் ஆகவில்லை. பாலா, சூர்யா இணையும் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X