திரைத் துளி
திருவனந்தபுரம்:
மலையாள திரைப்பட இயக்குநர் ஷாஜி எம்.கரூன், பிரான்ஸ் நாட்டின் உயரியவிருதான செவாலியர் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் மூன்றாவது திரைப் பிரபலம் காரூன்.தொடர்பான செய்திகள், சத்யஜித் ரே, சிவாஜி கணேசன் ஆகியோர் செவாலியர் விருதுபெற்றுள்ளனர்.
கலையுலகில் சிறந்த சேவை புரிந்ததற்காக காரூனுக்கு செவாலியர் விருது தருவதாகபிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
ஷாஜி காரூன் இயக்கிய வானப்பிரஸ்தம் சமீபத்தில் தேசிய விருதுகளைக் குவித்ததுநினைவிருக்கலாம். கேரள மாநில சலசித்திர அகாதெமியின் தலைவராக தற்போதுகாரூன் உள்ளார்.
செவாலியர் விருது கிடைத்தது குறித்து காரூன் கூறுகையில், சிறப்பு வாய்ந்த ஒருவிருதின் மூலம் நான் சிறந்த திரைப்பட பிரபலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுமகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
யு.என்.ஐ.
Comments


Click it and Unblock the Notifications