அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரி டிரஸ்… ஷகிலா மகள் மிலாவுடன் நடத்திய போட்டோ ஷூட் !
சென்னை : நடிகை ஷகிலா தனது மகள் மிளாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் இணைத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை மிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வைரலாகி வருகிறது.

கொடிகட்டி பறந்தார்
மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படத்தின் துணை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா. 90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப்பறந்தார் ஷகிலா. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இதனால் பிரபல கதாநாயகர்களின் படங்கள் வெளியாவது பெரும் சவாலாக இருந்தது.

அனைத்து கதாபாத்திரங்களில்
மலையாள படம் என்றால அது ஷகிலா படம் தான் என்று பேசப்பட்ட ஷகிலா. கிட்டத்தட்டட 110க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆபாச படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, குணசித்திர வேடம், நகைச்சுவை கதாபாத்திரம் என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

அன்பான அம்மா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் மீதான ரசிகர்களுடைய பார்வை முற்றிலுமாக மாறி உள்ளது. ரசிகர்கள் அவரை எங்கு பார்த்தாலும் அம்மா என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

சகுந்தாலாவாகவும்
இந்நிலையில் நடிகை ஷகிலா தனது வளர்ப்பு மகள் மிலாவுடன் இணைந்து அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் ஷகிலா, மேனகாவாகவும், மிளா சகுந்தாலாவாகவும் கெட்டப் போட்டு எடுத்த போட்டோஷூட் வைரலானது.
கறுப்பு நிற உடையில்
இதேபோல தற்போது இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அதில், கறுப்பு நிற உடையில் அம்மாவும் மகளும் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











