»   »  ஆபாசப் பட வழக்கு-நடிகை ஷகீலா உள்பட 9 பேர் கோர்ட்டில் ஆஜர்

ஆபாசப் பட வழக்கு-நடிகை ஷகீலா உள்பட 9 பேர் கோர்ட்டில் ஆஜர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Shakeela
நெல்லை: ஆபாச நடத்தில் நடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷகீலா உள்பட 9 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜாராகினர்.

பாளையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி இளமை கொண்டாட்டம் என்ற மலையாள படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் அரசால் அனு்மதிக்கப்பட்ட காட்சியை விட ஆபாசமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தியேட்டருக்கு அதிரடியாக சென்ற போலீசார் படச்சுருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக ஆபரேட்டர் பரமசிவன், தியேட்டர் குத்தகை உரிமையாளர் மதுரையை சேர்ந்த வசீகரன், தியேட்டர் ஊழியர்களான சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து, தாமஸ், மற்றும் ஆபாச படத்தில் நடித்ததாக நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நெல்லை ஜேஎம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் உள்பட 9 பேர் கோர்ட்டில் ஆஜாராகினர். கோர்ட்டில் சாட்சிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ராஜேந்திர கண்ணன் ஏப்ரல் 1ம் தேதிக்கு ஓத்தி வைத்து உத்தரவிட்டார்.

English summary
Actress Shakeela appeared before Nellai JM 2. A case is pending against Shakeela for acting in a Malayalam movie since 2003..
Please Wait while comments are loading...