ஷகீலா பயோ பிக் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. ஆனா பாஸ்.. எந்த சைட்ல பார்த்தாலும் அவங்க மாதிரியே இல்லையே!

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மும்பை: இந்தியில் தயாராகும் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் தயாராகிறது. இப்படத்தை கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா கதாநாயகியாக நடிக்கிறார்.

Shakeela biopic first look!

இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ளை நிற கேரள புடவையில் ரிச்சா சட்டா ஓட்டு வீட்டின் வராந்தாவில் நிற்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சென்னையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஷகிலாவுக்கு சிறுவயதில் படிப்பில் ஆர்வம் இல்லை. ஆனால் நடிப்பில் ஆர்வம் இருந்தது. ஒருவழியாக பள்ளிப்படிப்பை முடித்த பிறகு ஷகிலா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரின் கிளாமரான நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஷகிலாவின் திரைவாழ்க்கையில் மிக முக்கியப் படமாக கின்னருத்தும்பிக்கள் சொல்லப்படுகிறது. மேலாடை இல்லாமல் ஷகிலா நடித்ததைப் பார்க்க தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. வெறும் 12 லட்ச ரூபாய் பட்ஜெடில் எடுக்கப்பட்ட இப்படம், நான்கு கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது.

அதன் பிறகு ஷகிலாவின் மார்க்கெட் ஏகபோகத்திற்கு உயர்ந்தது. அவரின் கவர்ச்சி நடிப்புக்காக கால் கடுக்க தயாரிப்பாளர்கள் காத்திருந்தனர். இரவு பகல் பாராமல் நடிக்க ஆரம்பித்தார். ஒரே ஆண்டில் 20க்கும் மேற்பட்ட படங்கள் ஷகிகிலா நடித்து வெளியாகின. ஆனால் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை.

அடுத்த ஆண்டு சில சதிவேலைகள் நடந்து அவர் கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X