ரிலீஸ் ஆன ஒரே நாளில்.. இணையத்தில் கசிந்த 'ஷகிலா' படம்.. படக்குழு அதிர்ச்சி.. புகார் கொடுக்க முடிவு!
சென்னை: கிறிஸ்துமஸ் அன்று வெளியான 'ஷகிலா' பயோபிக் படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.
Recommended Video
தனது கவர்ச்சியால் மலையாள சினிமாவை கலக்கியவர் நடிகை ஷகிலா. இவர் படங்களைப் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது.
வசூலும் அள்ளியது. பிரபல மலையாள முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்குத் தள்ளி வசூல் அள்ளின.

வாய்மொழி தடை
இது மலையாள முன்னணி ஹீரோக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஷகிலா படங்களால் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கேரளாவில் எதிர்ப்பு கிளப்பியது. அவரை மலையாள சினிமாவில் நடிக்க வாய்மொழியாக தடை பிறப்பித்தனர்.

ரிச்சா சத்தா
பின்னர் அவர், தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வந்தார். இப்போது காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது வாழ்க்கை கதை சினிமாவாகி இருக்கிறது. இதில் ஷகிலாவாக பிரபல இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். பங்கஜ் திரிபாதி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்திரஜித் லங்கேஷ்
கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் போதை பொருள் விவகாரத்தில் பல நடிகர், நடிகைகள் பெயரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்தவர். இந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

கிறிஸ்துமஸ்
இந்தப் படம் கொரோனாவுக்கு முன்பே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். பின்னர் ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தியேட்டரில் வெளியிடவே விரும்புவதாக இயக்குனர் கூறியிருந்தார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் அன்று இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியானது.

கற்பனை கதைகள்
பயோபிக் என்று கூறப்பட்ட இந்தப் படத்தில் கற்பனையான கதைகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே, வெளியான ஒரு நாளிலேயே இந்தப் படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

நடவடிக்கை
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள படக்குழு, இதுபற்றி புகார் கொடுக்க இருப்பதாகவும் யார் இதை செய்தார்கள் என்பதை கண்டுபிடித்து சரியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











