நீங்கள் பிக் பாஸ்5ல் கலந்துக்க போறீங்களா? சூசகமாக பதிலளித்த ஷகிலாவின் மகள் !
சென்னை : ஷகிலாவின் வளர்ப்பு மகள் பிக்பாஸ் 5ல் போட்டியாளராக பங்கேற்ப இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில் அதை உறுதி செய்வது போல மிலா ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அவரின் சூசகமான இந்த பதிலால் அவர் நிச்சயம் சீசன் 5ல் இடம் பெறுவார் என்று நம்பப்படுகிறது.
நடிகர் ராதா ரவி, மஞ்சூரலி கான், எம்.எஸ். பாஸ்கர், குக் வித் கோமாளி பிரபலங்களான பவித்ரா லட்சுமி, சுனிதா உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

ஏராளமான படங்களில்
90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப்பறந்தார் ஷகிலா. இவர் கிட்டத்தட்ட 110க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆபாச படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, குணசித்திர வேடம், நகைச்சுவை கதாபாத்திரம் என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

அனைவரிடமும் அன்போடு
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷகிலா. இந்த நிகழ்ச்சிக்கு பின், கவர்ச்சி நடிகை என்ற பெயர் மறைந்து, அனைவரும் அவரை அன்போடு அம்மா என்று அழைத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரிடதிலும் அன்போடு பழகினார்.
Recommended Video

கலக்கல் போட்டோஷூட்
இந்த நிகழ்ச்சியில் தனது வளர்ப்பு மகளான மிலாவை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ஷகிலா. மிலா ஒரு ஆடை வடிவமைப்பாளர் மற்றும் மாடல், நடிகையாவார். சமீபத்தில் அம்மா பெண்ணு
இருவரும் இணைந்து நடத்தி போட்டோஷூட் இணையத்தில் வைரலாகின.

பிக் பாஸ் 5
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிலா, சமீபத்தில் கேள்வி பதில் கலந்துரையாடலில் பங்கேற்றார் . அதில் ஒரு நெட்டிசன்ஸ் , நீங்கள் பிக் பாஸில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளிவருகிறதே இது உண்மையா என கேட்டுள்ளார். இதற்கு மிலா இரண்டு விரல்களையும் இணைந்து அதாவது பழம் விடுவது போல ஒரு சமிக்ஞை செய்துள்ளார். அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதால் அவர் பிக்பாஸ் இல்லத்தில் நிச்சயம் இருப்பார் என்று நம்பப்படுகிறது.

டைட்டில் வின்னர்
தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளன. நான்வது சீசனில் ஆரி மிகப்பெரிய அளவில் வாக்குகள் வித்தியாசத்தில் டைட்டிலை வென்றார். அவர் பத்து கோடிக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். 5வது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனாவால் அவை தள்ளிப்போய் உள்ளது. நிலைமை சரியானதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











