Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நிறைமாத நிலவாக மாறிய ஷகீலாவின் மகள்.. பிரெக்னன்ஸி போட்டோஷூட்டை பார்த்து கமெண்ட் போட்ட அர்ச்சனா!
சென்னை: நடிகை ஷகீலாவின் மகள் கர்ப்பமாக உள்ளாரா என்கிற கேள்வி தான் தற்போது சமூக வலைதளங்களை ஆட்டிப் படைத்து வருகிறது.
அதற்கு காரணம் ஷகீலாவின் மகள் மிலா சமீபத்தில் நடத்திய பிரெக்னன்ஸி போட்டோஷூட் தான்.
அந்த போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா அதற்கு கொடுத்த கமெண்ட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
12 வருடங்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.. மனம் திறந்த மாரி செல்வராஜ்!

ஷகீலா மகள்
நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகள் மிலா ஒரு திருநங்கை என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். பிக் பாஸ் சீசன் 5ல் இவர் தான் கன்ஃபார்ம் போட்டியாளர் என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மிலா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

திருநங்கை போட்டியாளர்
மிலாவுக்கு பதிலாக திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அவரும் எதிர்பாராத விதமாக ஒரே வாரத்தில் அதிரடியாக வெளியேறியது திருநங்கைகளுக்கு மட்டுமின்றி பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் விமர்சனம்
அதே சமயம் ஷகீலாவின் மகள் மிலா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனத்தை தனியார் யூடியூப் நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மிலாவின் ரசிகர்கள் பலர் நீங்க ஏன் இந்த ஷோவில் கலந்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வந்தனர். அடுத்த சீசனில் மிலாவை எதிர்பார்க்கலாமா? என்றும் ரசிகர்கள் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

கர்ப்பமாக உள்ளாரா
இந்நிலையில், திடீரென நிறைமாத கர்ப்பிணி போல மிலா இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஷகீலாவின் மகள் மிலா எப்படி கர்ப்பமானார் என ரசிகர்கள் ஆர்வத்தோடு அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று பார்த்தால், அங்கே அந்த போட்டோவை பகிர்ந்துள்ள மிலா அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.

அந்த ஆசை
தன்னால் குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாது என தெரியும். ஆனால், இந்த போட்டோஷூட் என் கனவை நனவாக்கி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உள்ளுக்குள் இனம் புரியாத ஒரு வித மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டு விட்டது என ரொம்பவே நெகிழ்ச்சியுடன் மிலா அந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

அர்ச்சனா போட்ட கமெண்ட்
பிக் பாஸ் பிரபலம் தொகுப்பாளினி அர்ச்சனா மிலாவின் இந்த போஸ்ட்டை பார்த்தவுடன் "அந்த கனவு எனக்கு நனவாகிவிட்டது, என்னுடைய பேபி டால்" என மிலாவை தனது மகளாக பாவித்து அர்ச்சனா போட்ட அந்த கமெண்ட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. "மை ஸ்வீட் ஹார்ட் அக்கா' என மிலாவும் அர்ச்சனாவுக்கு அன்பு முத்தங்களை பரிசளித்துள்ளார்.