குடி போதையில் கதவை தட்டி.. நடிகை ரூபஸ்ரீக்கு நடந்த கொடுமை.. கொந்தளித்த ஷகிலா!

சென்னை: மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் வெளியாகி பெரும் புயலை கிளப்பிய நிலையில், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து மோகன் லால் உட்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து பேட்டி அளித்த ஷகிலா, மலையாள சினிமாவில் நடந்த பல அசிங்கத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

மலையாள சினிமாவில் தற்போது நடிக்கும் பிரச்சனை பான் இந்தியா பிரச்சனை. இந்த கமிட்டி தெலுங்கு, தமிழ் என அனைத்திலும் இந்த கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாமல் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது ஏன்? இதில் மோகன்லால் பெயர் வரவில்லை இருந்தாலும், மோகன் லால் ஏன் ராஜினாமா செய்தார். அப்போது ஏதோ தவறு நடத்து இருக்கு என்றுதானே அர்த்தம். இருப்பதிலே மிகவும் மோசமான சங்கம் தமிழ் நடிகர் சங்கம் தான். ஆனால், கேரளாவில் நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டது. அப்படி இருக்கும் போது அந்த சங்கத்தை ஏன் களைக்க வேண்டும்,

shakeela hema commission mohanlal

எல்லா இடத்திலும் அட்ஜெஸ்ட்மெண்ட்: இந்த பாலியல் சம்பவம் மலையாள சினிமாவில் மட்டும் நடக்கவில்லை, தமிழ் சினிமாவிலும் நடக்கிறது, அதைவிட அதிகமாக தெலுங்கு சினிமாவில் இருக்கிறது. பெரும்பாலும் அட்ஜெஸ்ட்மெண்ட் நடிகர்கள், இல்லை அப்படி கேட்பது, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தான். இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அக்ரிமெண்டிலேயே இருக்கு. இதைவிட கொடுமை என்ன வென்றால், அடுத்த படத்திற்கு கூப்பிடுகிறேன் என்று மேனேஜர்களும் அட்ஜெஸ்ட் மெண்ட் கேட்பார்கள்.

ரூபஸ்ரீக்கு நடந்த கொடுமை: அதே போல, அந்த அறிக்கையில் குடித்துவிட்டு கதவை தட்டுவதாக புகார் கூறியிருக்கிறார்கள், அது உண்மைதான். நான் ஒருபடத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன் அப்போது அந்த படத்தில ரூபஸ்ரீ என்ற நடிகை கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, நைட் அந்த நடிகையின் ரூம் கதவை, நான்கு பேர் குடித்துவிட்டு தட்டி ரகளை செய்தார்கள். அப்போது, நான் அந்த நபர்களை தட்டிக்கொண்டு அடிதடியாக மாறியது. இப்படி நான் நடித்த படத்தில் எதாவது பிரச்சனை வந்தால் நான் அதை தட்டி கேட்டு இருக்கிறேன்.

கேரளாவில் ஆண் ஆதிக்கம்: மலையாள சினிமிவில் இந்த மாதிரியான பாலியல் ரீதியான பிரச்சனையை சந்தித்த முதல் நபர் நான் தான், 2000ம் ஆண்டில் இருந்து படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது, என் படத்தை வெளியிட வில்லை, என் படத்திற்கு தடை விதித்தார்கள், என்னை பற்றி பல புகார்களி கூறி ஒட்டுமொத்தமாக என்னை முடக்கியது மலையாள நடிகர் சங்கம் அம்மா தான். இது எல்லாம் அந்த சங்கத்தில் இருந்த ஒரு நடிகர் மூலம் எனக்கு தெரியவந்தது. நானே மலையாள படமே வேண்டாம் என்று வெறுத்து போகிற அளவிற்கு எனக்கு பிரச்சனை கொடுத்தார்கள். அப்படி நான் என்ன தவறு செய்தேன், என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு ஆண் ஆதிக்கம் கொண்டது கேரளா.

பல அசிங்கம் இருக்கு: தொடர்ந்து பேசிய ஷகிலா, என் முதல் படத்திற்கு எனக்கு ஒருவர் மேக்கப் போட்டார். அப்போது, நான் பிகினி அணிந்து இருந்தேன். அவர் எங்கேங்கே எப்படி எல்லாம் தொட்டார் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். அதே போல,கோல்மால் என்ற படத்தில் நடித்தேன் அப்போது, காஸ்டீம் டிசைனர் என் வீட்டுக்கு வந்து அளவு எடுத்தார். அப்போதும், அவர் அசிங்கமாக தான் என்னிடம் நடந்துகொண்டார். இப்படி பல அசிங்கங்கள் சினிமாவில் இருக்கு என்று நடிகை ஷகிலா அந்த பேட்டியில் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X