அந்த விஷயம் முதலில் அவருடன்தான் நடந்தது.. மனம் திறந்த ஷகீலா
சென்னை: Shakeela (ஷகீலா) முதன்முறையாக யாருடன் உடலுறவு வைத்துக்கொண்டேன் என நடிகை ஷகீலா ஓபனாக பேசியிருக்கிறார்.
இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

மோதிர கையால் குட்டுப்பட்ட கதை: அந்தப் படத்தில் நடித்தபோது ஸ்மிதா ஷகீலாவை அறைந்து விட்டார். சில்க் ஸ்மிதாவின் கையால் அறை வாங்கியதாலோ என்னவோ அவருக்கு போட்டியாகவே திரையுலகம் ஷகீலாவை முன்னிறுத்தியது. அதற்கு தகுந்தாற்போல் ஷகீலாவும் பல அடல்ட் படங்களில் நடித்தார். சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து இறந்துபோக அவரது இடத்தை ஷகீலா கிட்டத்தட்ட நெருங்கினார். ஆனால் சில்க் இடத்தை அவரால் முழுவதுமாக பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் ஷகீலாவின் வளர்ச்சி அசுர வேகத்திலேயே இருந்தது.
100 நாட்கள் ஓடிய படம்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியப்பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.
ஒதுங்கிய ஷகீலா: பல அடல்ட் படங்களில் நடித்த அவர் ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அதனையடுத்து விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டார். இறுதிச்சுற்றுவரை அவர் அதில் முன்னேறினார். தற்போது தனியார் ஊடகங்களுக்காக பிரபலங்களை பேட்டி எடுத்துவருகிறார் ஷகீலா. அதிலும் தனது போல்டான அணுகுமுறையால் அப்ளாஸை அள்ளிவருகிறார்.
ஷகீலாவின் பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நீங்கள் வெர்ஜினா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லையே என்றார். சரி முதன்முறையாக யாருடன் உடலுறவு வைத்துக்கொண்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "என்னுடைய நண்பர் பால் ரிச்சர்ட் என்பவருடன் தான் முதன்முதலில் உடலுறவு கொண்டேன்" என்றார்.
தத்து எடுத்த ஷகீலா: இதற்கிடையே ஷகீலா விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த குணத்தை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் நமிதா என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











