Bigg Boss - பிக்பாஸில் அதுக்கென ஒரு ரூம் கொடுங்க...ஒரு நாளைக்கு பத்து சிகரெட் எப்படி பத்தும்.. ஷகீலா ஓபன் டாக்
சென்னை: Shakeela in Bigg Boss (பிக்பாஸில் ஷகீலா) பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனி அறை வேண்டுமென நடிகை ஷகீலா கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.
இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

பயந்த ஹீரோக்கள்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.
குக் வித் கோமாளி: ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனிதியை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் நமிதா என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ்: இந்த சூழலில் தெலுங்கில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகீலா கலந்துகொண்டார். ஏற்கனவே கன்னடத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட அவர் தற்போது தெலுங்கில் ஏழாவது சீசனிலும் கலந்துகொண்டார். ஆனால் வீட்டுக்குள் சென்ற வேகத்திலேயே வெளியே வந்தார் அவர். இந்த சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தனி அறை வேண்டும்: அவர் அளித்த பேட்டியில், "ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவருக்குக்கூட ஒரு பழக்கம் இருக்கும். அப்படித்தான் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம். தெலுங்கு பிக்பாஸில் புகை பிடிப்பதற்கு என்று ஒரு அறை கிடையாது. அதனால்தான் நான் ஆங்காங்கே அமர்ந்து புகை பிடித்தேன். தனியாக அறை இருந்திருந்தால் நான் ஏன் வெளியே உட்கார்ந்து புகை பிடித்திருப்பேன்.
பிக்பாஸ் செய்யவில்லை: நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சில நாட்கள் முன்பு நான் புகைப்பிடிக்கும் காட்சி மட்டும்தான் ஒளிபரப்பப்பட்டது. அந்த இடத்தில் ஒரு கவர் போடும்படி கோரிக்கை வைத்தேன். ஆனால் பிக்பாஸ் அதை செய்யவில்லை. என்னுடைய ஒரே ஃப்ரெண்ட் சிகரெட்தான். 30 வருடங்களாக என்கூடவே சிகரெட் இருக்கு. அதை என்னால் விடமுடியவில்லை.
நிறைய சிகரெட்: நான் ஒருநாளைக்கு நிறைய சிகரெட் பிடிப்பவள். ஆனால் அங்கோ ஒரு நாளைக்கு பத்து சிகரெட்தான் கொடுத்தார்கள். அந்தப் பத்திலும் மூன்று பேர் என்னிடமிருந்து வாங்கி சிகரெட் பிடித்தார்கள். சிகரெட் கொடுக்கவில்லை என்றால் நான் தூங்கமாட்டேன் என்று அடம்பிடித்துதான் நான் சிகரெட் வாங்கினேன்" என்றார். தமிழில் நடந்து வரும் பிக்பாஸ் 7ல் சிகரெட் பிடிப்பதற்கென்று தனி அறை கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











