Shakeela - அஜித்தின் மச்சான்தான் ஷகீலாவின் முன்னாள் காதலரா?.. அட இது புதுசா இருக்கே
சென்னை: நடிகை ஷகீலா பிரபலமான நடிகையாக இருந்தவர். ஒருகாலத்தில் அவரது படங்கள் மம்மூட்டி, மோகன் லால் படங்களுக்கே டஃப் கொடுத்ததாக சினிமா இண்டஸ்ட்ரியில் பரவலான பேச்சு உண்டு. நடிப்பிலிருந்து தற்போது ஒதுங்கியிருக்கும் ஷகீலா சில யூட்யூப் சேனல்களுக்காக பேட்டிகள் எடுப்பதையும், பேட்டிகள் கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த சூழலில் தனது முன்னாள் காதலர் குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

பயந்த ஹீரோக்கள்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.
குக் வித் கோமாளி: ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனிதியை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் நமிதா என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று காதல்கள் செய்த ஷகீலா: இப்படி வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த ஷகீலாவின் காதல் கதை குறித்து தெரியவந்திருக்கிறது. ஷகீலா மொத்தம் மூன்று காதல்கள் செய்திருக்கிறாராம். அதாவது 10 வயதில் சுரேஷ் ரெட்டி என்பவரை முதல் காதல் செய்தாராம் ஷகீலா. சுரேஷ் ரெட்டியை காதலித்துக்கொண்டிருக்கும்போதே பள்ளியிலும் ஒருவரை காதலித்தாராம் ஷகீலா. அவை தவிர்த்து இன்னொரு காதலையும் செய்ததாக பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
லேட்டஸ்ட் பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது தனது காதல்களில் ஒரு காதல் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “15 வயது இருக்கும் நானும், ரிச்சர்ட் ரிஷியும் நண்பர்களாக அறிமுகமானோம். அப்போது அவர் என் மீது காட்டிய அன்பு பிடித்ததன் காரணமாக காதல் மலர்ந்தது. இருந்தாலும் வெளியில் சொல்லிக்கொள்ளாமல்தான் இருந்தோம். ஒருகட்டத்தில் ரிஷியும் பிஸியாக நடிக்க தொடங்கினார். நானும் எனது கரியரில் பிஸியாக இருந்தேன். எதிர்காலத்தில் வாய்ப்பு அமைந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் காலப்போக்கில் அது அமையவில்லை. இருந்தாலும் இப்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்” என்றார்.
யாஷிகாவின் காதலர்: ரிச்சர்ட் ரிஷி நடிகை ஷாலினியின் தம்பி ஆவார். திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் வெற்றி ஒன்றுக்காக காத்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த்தை காதலிப்பதாக கூறப்படுகிறது. இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதை கவனித்த யாஷிகா ஆனந்த்தின் தாய், ரிச்சர்டும், யாஷிகாவும் காதலிக்கவில்லை என்று விளக்கம் தெரிவித்து காதல் கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











