நடிகர் பாலைய்யாவை காதலித்தேன்.. ஆனால், ஷகிலா சொன்ன அந்த விஷயம்!

சென்னை: ஒரு கால கட்டத்தில் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ஷகிலா, தற்போது யூடியூப் சேனலில் திரைப்பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர்களை நேரடியாக சந்தித்து பேட்டி எடுத்து வருகிறார். அண்மையில் இவர் தனது வாழ்க்கை குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், தான் தெலுங்கு நடிகர் பாலைய்யாவை காதலித்ததாக கூறியுள்ளார்.

அன்றைய கால கட்ட சினிமாவில், தமிழ் சினிமாவில் நிச்சயமான ஒரு ஐட்டம் பாடல் இருக்கும் என்பதால், அதில் கொடி கட்டி பறந்தார் சில்க் ஸ்மிதா. இவர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிவிட்டால் போதும் படம் ஹிட் என பல தயாரிப்பாளர்கள் இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர்.தமிழ் சினிமாவில் சில்க் கொடி கட்டி பறக்க மலையாள சினிமாவில் ஷகிலா மாஸ் காட்டிக்கொண்டிருந்தார். மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழிகளில் இவர் படங்களில் நடித்து உள்ளார்.

shakeela balakrishna interview

நடிகை ஷகிலா: மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் என பல முன்னணி நடிகர்களின் படங்களை பெறாத வசூலை ஷகிலாவின் படம் அள்ளிவிடுமாம். அதற்கு காரணம் ஷகிலா விவகாரமான படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டிய ரசிகர்களை தன் பக்கம் வளைத்துப்போட்டு இருந்தார். அதன் மலையாள சினிமாவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அங்கிருந்து வந்த ஷகிலா, தமிழ் சினிமா துணை நடிகையாக சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். இடையில் சினிமாவில் தென்படாமல் இருந்த ஷகிலா, விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். கவர்ச்சி நடிகையாகவே பார்க்கப்பட்டு வந்த ஷகிலாவை அந்த நிகழ்ச்சி வேறு ஷகிலாவை மக்களுக்கு தெரியவைத்தது.தற்போது, யூடியூப் சேனல்களில் சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

ஏழ்மையான குடும்பம்: அண்மையில், ஷகிலா அளித்துள்ள பேட்டியில், நான் என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தான் சினிமாவில் நடிக்க வந்தேன். முதலில் ஷூட்டிங் என்றால் எப்படி நடக்கும் என்று என் பள்ளிக்கு அருகில் நடந்த ஷூட்டிங்கில் தான் பார்த்தேன். அப்போது அங்கு அனைவரும், தட்டில் வகைவகையான சாப்பாட்டை வைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்துத்தான், நாமும் சினிமாவிற்கு போனால் நன்றாக சாப்பிடலாம் என்று சினிமாவில் நடிக்க வந்தேன்.

பாலைய்யாவை காதலித்தேன்: தொடர்ந்து பேசிய ஷகிலா, நான் பத்து வயதிலேயே தெலுங்கு நடிகர் பாலைய்யாவை காதலித்தேன். எனக்கு பத்து வயது இருக்கும் போது, குடும்பத்தோடு நாங்கள் பொருட்காட்சி போய் இருந்தோம். அப்போது, தான், நடிகர் பாலைய்யாவை முதன் முதலில் பார்த்தேன். அப்போது அவர் வெள்ளை நிற டீ ஷர்ட், வெள்ளை நிறத்தில் பேன்ட் போட்டு இருந்தார். அப்போது அவர், என்னை பார்த்து சிரித்துவிட்டார். அந்த நேரத்தை நான் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். அப்போதே நான் என் அப்பாவிடம் நான் இவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என சொன்னேன். நான் அவருடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. ஆனால், நிகழ்ச்சி ஒன்றில் அவரைப்பார்த்து 10 வயதில் இருந்தே உங்களை காதலித்தேன் என்கிற விஷயத்தை சொன்னேன் அதைக்கேட்டு அவர் சிரித்தார் என்று ஷகிலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X