கோட்டபுரம் அப்சரா தியேட்டரில்.. ஷகீலாவின் டிரைவிங் லைசென்ஸ்.. டீசரே சும்மா புல்லரிக்க வைக்குதே!
திருவனந்தபுரம்: மலையாளத்தில் உருவாகி வரும் 'ஷகீலா' டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆபாச பட நடிகையாக தென்னிந்திய சினிமாவையே கலக்கி வந்த ஷகீலா பற்றிய பயோபிக் படங்களை இயக்க பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகை சராயு ஷகீலாவாக நடித்துள்ள குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆபாச பட நடிகை
பிளே கேர்ள்ஸ் படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான நடிகை ஷகீலா, ஆபாச பட நடிகையாக மாறி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியில் கட்டிப் போட்டு வைத்திருந்தவர். ஆபாச படம் போடும் பல தியேட்டர்கள் ஷகீலா தியேட்டர் என்றே அழைக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன.

விஜய்யுடன்
சினிமா படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ஷகீலா, பின்னர் ஆபாச பட உலகில் முடிசூடா ராணியாக திகழ்ந்தார். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஷகீலா பிரபலமான பின்னரும், மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் ஷகீலா, அவராகவே நடித்திருப்பார்.

பயோபிக்
நடிகை 'சில்க்' ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிப்பில் ‘டர்ட்டி பிக்சர்' எனும் படமாக எடுத்து தேசிய விருது வரை அள்ளினர். இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றையும் பயோபிக் படமாக படமாக எடுக்க பலரும் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலையாள ஹீரோயின்
இந்நிலையில், மலையாள திரையுலகின் பிரபல ஹீரோயின் சராயு மோகன், ஷகிலா எனும் குறும்படத்தில் நடித்துள்ளார். கப்பல் முதலாளி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஜனப்பிரியா, ஹஸ்பன்ட் இன் கோவா, ரேடியோ, அம்மினி பிள்ளா உள்ளிட்ட பல தரமான மலையாள படங்களில் நடித்து இவர், நடிப்பில் தற்போது ‘ஷகிலா' எனும் குறும்படம் ரிலீஸ் ஆகப் போகிறது.
ஷகீலா டீசர்
தற்போது வெளியாகி உள்ள ஷகிலா குறும்பட டீசரில், கோட்டபுரம் அப்சரா தியேட்டரில் ஷகீலாவின் டிரைவிங் லைசென்ஸ் படம் நாளை முதல் ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்புடன் ஒரு ஜீப் ஊரில் செல்ல, சிலர், அந்த அறிவிப்பை கேட்டு, மிகவும் ஆவலுடன் காத்திருப்பது போல டீசர் அமைந்திருக்கிறது. டீசரின் இறுதியில், ஷகிலா கதாபாத்திரத்தில் சராயு மோகன் நடிப்பதாக காண்பித்துள்ளனர்.

எப்போ ரிலீஸ்
இயக்குநர் சுஜீஷ் இயக்கத்தில் சராயு மோகன் நடிப்பில் உருவாகி உள்ள இந்த குறும்படம் வரும் ஜூலை 5ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியாக உள்ளதாகவும், அதே டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் போன்ற துல்லியத்துடன் பிரபலங்கள் உருவாக்கி உள்ள இந்த குறும்படத்திற்கு மலையாள ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications











