ஷகீலா மேடமும், 2 வாளியும், ஒரு வடச்சட்டியும்.. கூடவே குண்டுச் சட்டியி்ல் பாவாடை சாமி!!
சென்னை: ஷகீலா படத்தைப் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டது.. என்று பூத்திருந்த கண்களும், காத்திருந்த கால்களுமாக தவம் இருக்கும் ஷகீலா ரசிகர்களே.. கேளுங்கலே.. உங்களுக்காகவே ஒரு செய்தி.. ஷகீலா நடிக்கும் ஒரு புதுப் படம் சீக்கிரமே வரப் போகுது...
அந்தப் படத்திற்குப் பெயர் பரஞ்சோதி. கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்க, ஹீரோவாக சாரதி என்ற புதுமுகம் நடிக்க உருவாகி வளர்ந்து வருகிறது பரஞ்சோதி.
இந்தப் படத்தில்தான் காமெடி டிராக்கில் ஷகீலாவை புகுத்தியுள்ளனர். கஞ்சா கருப்புடன் இணைந்து அதகளம் பண்ணுகிறாராம் ஷகீலா.

அதிலிருந்து இதற்கு...
முன்பு கவர்ச்சிக்கு ஷகீலா என்று கூறப்பட்டது. அதெல்லாம் ஒரு காலம்.. அது மலையேறி விட்டது. இப்போது ஷகீலாவுக்கு காமெடிதான் நன்றாக வருகிறதாம். எனவே காமெடிக்கு மாறி விட்டார்.

இடையில் சின்ன கேப்...
காமெடிக்கு மாறியதும் தனது நல்ல நண்பரான சந்தானத்துடன் இணைந்து சில படங்களில் சிரிக்க வைத்தார். அதன் பிறகு திடீரென ஒரு இடைவெளி விழுந்து விட்டது. ஷகீலாவைக் காணவில்லை.

ரீ என்ட்ரி...
இந்த நிலையில் தற்போது பரஞ்சோதி மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் ஷகீலா.

பத்மா பலகாரக் கடை
பத்மா பலகாரக் கடை என்ற கடையின் ஓனர் பாவாடை சாமியின் மனைவியாக இப்படத்தில் நடித்துள்ளார் ஷகீலா.

குண்டுச்சட்டியில் பாவாடை சாமி
தனது கணவராக வரும் பாவாடை சாமியை சைக்களின் பின் சீட்டி்ல குண்டுச் சட்டியை வைத்து தள்ளிக் கொண்டு வருவது போல ஸ்டில் சொல்கிறது. சைக்கிளில் ஹாரன், ரெண்டு பக்கமும் பெரிய வாளி, ஒரு வடக் கரண்டி சகிதம் காமெடியில் கலக்கியுள்ளாராம் ஷகீலா.
கஞ்சா கருப்புவும், இவரும் வரும் காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி தருமாம்... !


Click it and Unblock the Notifications











