லேடீஸ் நாட் அலவ்டு.. அடப்பாவமே ஷகிலாவுக்கே இந்த நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்!

தனது நடிப்பில் உருவாகியுள்ள லேடீஸ் நாட் அலவ்டு படத்திற்கு சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகை ஷகீலா புகார் கூறியுள்ளார்.

சென்னை: தனது படத்திற்கு சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகை ஷகீலா புகார் தெரிவித்துள்ளார்.

ஒருகாலத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களை எல்லாம் கதி கலங்க வைத்தவர் நடிகை ஷகீலா. கேரளாவில் ஷகீலா படத்துடன் போட்டி போட முடியாத அளவுக்கு அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.

தென்னிந்திய ரசிகர்களை எல்லாம் தனது கவர்ச்சியினால் கிறங்கடித்த ஷகீலா, ஒருகட்டத்திற்கு மேல் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். மார்க்கெட் போன பிறகு சில காலம் வறுமையில் வாடினார்.

ஷகீலாவின் லேடீஸ் நாட் அலவ்டு

ஷகீலாவின் லேடீஸ் நாட் அலவ்டு

தற்போது தனது கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்து ‘லேடீஸ் நாட் அலவ்டு' என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் சென்சார் சான்று கிடைக்காததால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. இரண்டு முறை சென்சாருக்கு அனுப்பியும் சான்று கிடைக்கவில்லை.

அடல்ட்ஸ் காமெடி

அடல்ட்ஸ் காமெடி

இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நடிகை ஷகீலா," லேடீஸ் நாட் அலவ்டு படத்தை நாங்கள் அடல்ட்ஸ் ஒன்லி படமாக தான் எடுத்திருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே அதை தெளிவாக தெரிவித்து வருகிறோம். இது குடும்பப் படம் அல்ல என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

சென்சார் பிரச்சினை

சென்சார் பிரச்சினை

அப்படி இருந்தும் எங்கள் படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுக்கிறார்கள். மற்ற அடல்ட் காமெடி படங்களுக்கெல்லாம் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்சார் போர்டு சான்று வழங்குகிறது. ஆனால் லேடீஸ் நாட் அலவ்டு படத்தை மட்டும் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.

லஞ்சம் கேட்கிறார்கள்

லஞ்சம் கேட்கிறார்கள்

படத்துக்கு சான்றிதழ் வழங்க சில சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக என்னிடம் சொன்னார்கள். இந்த படத்தை நாங்கள் கடன் வாங்கி தான் எடுத்திருக்கிறோம். பல பேருடைய உழைப்பும், முதலீடும் இந்த படத்தில் இருக்கிறது", என ஷகீலா கூறியுள்ளார்.

ரசிகர்கள் சோகம்

ரசிகர்கள் சோகம்

ஷகீலாவின் லேடீஸ் நாட் அலவ்டு படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அப்படம் பல்வேறு பிரச்சினைகளால் ரிலீசாகாமல் தள்ளிப் போவது அவர்களை சோகமடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X