shakeela: கமல் சார் மேல இருந்த மரியாதை ரொம்பவே குறைஞ்சிடுச்சு.. மாயா மோசமானவ.. ஷகீலா பளிச்!
சென்னை: பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், குக் வித் கோமாளி பிரபலமும் தெலுங்கு பிக் பாஸ் பிரபலமுமான ஷகீலா தற்போது தனது கருத்தை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ஆண்டனியை தனக்கு சுத்தமாக பிடிக்காது என்றும் அவர் மோசமாக சிரிக்க ஆரம்பித்தாலே டிவியை ஆஃப் செய்து விட்டு நகர்ந்து விடுவேன். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எல்லாமே யோக்கியமானவர்கள் கிடையாது. பிரதீப்பை ஒரு உமனைசர் போல சித்தரித்து வெளியே அனுப்பியது முற்றிலும் தவறு எனக் கூறியுள்ளார்.

கமல் சார் தீர விசாரித்து இருக்கணும், பிரதீப் ஆண்டனி பேச டைம் கொடுத்திருக்கணும் என ஷகீலா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தூக்குத் தண்டனை கைதிக்கு கூட: பிக் பாஸ் வீட்டில் பிரதீப் ஆண்டனி அத்துமீறி நடந்திருந்தால் பெண்கள் அப்போதே தங்கள் எதிர்ப்பை ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தூக்குத் தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை என்ன என கேட்பாங்க, ஆனால், கமல் சார் எதையும் கேட்காமல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது தப்பு தான் என ஷகீலா கூறியுள்ளார். ஏற்கனவே அப்செட் ஆக உள்ள பிரதீப் ஆண்டனி இந்த காரணத்தால் வெளியே வந்ததும் தற்கொலை செய்துக் கொண்டால் அவன் உயிரை யாராவது திருப்பிக் கொடுக்க முடியுமா? என்றும் ஷகீலா கேள்வி எழுப்பி உள்ளார்.
மரியாதையே போச்சு: நான் கமல் சாரோட தீவிர ரசிகை. அவர் மீதிருந்த மரியாதை இந்த ஒரு விஷயத்தால் குறைந்துக் கொண்டே போகிறது. ஆனால், முழுக்க கமல் சார் மீது தவறில்லை. அவர் ஒரு ஹோஸ்ட் மட்டுமே. பிக் பாஸ் இயக்குநர், அந்த டீம் சொல்வதை மட்டும் தான் இவர் செய்ய முடியும். ஆனால், அதில், கடைசியில் தனது அரசியல் ஆதாயத்துக்காக அவர் பேசியது தான் தற்போது அவரை அனைவருமே திட்ட காரணம் என்றார்.
மாயா மோசமானவ: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களிலேயே மாயா ரொம்ப மோசமானவ என்றும் பிரதர்னு பழகிட்டு அப்புறம் எப்படி பிரதீப் பற்றி இப்படி அசிங்கமா பேசலாம் என்றும் நிக்சன் தடவுறதையே வேலையா வச்சிருக்கான் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விளாசி உள்ளார். மேலும், ரெட் கார்டு வாங்கிய பிரதீப் ஆண்டனி கிராண்ட் ஃபினாலேவுக்கு கூட இந்த ஷோவுக்கு வரமாட்டார் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











