என்ன மாதிரி யாரும் ஏமாறாதீங்க.. ஷகீலா அட்வைஸ் !
சென்னை: தமிழில், ஜல்லிகட்டுக்காளை, உதவிக்கு வரலாமா, மறுமலர்ச்சி ஆகிய படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை ஷகிலா.
Recommended Video
தற்போது "குக்கு வித் கோமாளி" என்னும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் மீண்டும் காட்சி தர தொடங்கியுள்ளார்.
ஷகிலாவின் பயோபிக்கான 'ஷகிலா', கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது. அந்த படத்தின் பிரெஸ் மீட்டில் ஷகீலா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஷகீலா நெகிழ்ச்சி
ஷகீலா திரைப்படத்தின் பிரெஸ் மீட்டில் பேசிய ஷகீலா, தான் உயிரோடு இருக்கும் போதே என்னுடைய பயோபிக் திரைப்படமாவது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், எப்போதும் தன்னை பற்றி நெகட்டிவ் பேசாத மீடியா துறை, படத்தின் இயக்குனர், தன்னுடைய அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கு நன்றி கூறி நெகிழ்ச்சியடைந்தார்.

பெண்களுக்கு அறிவுரை
என்னை பற்றி பின்னால் பேசுவர்களை பற்றி கவலை இல்லை. அவங்களுக்கு முன்னாடி பேச தைரியம் இல்லை எனவும், நான் செய்த தவறை இனி வரவிருக்கும் நடிகைகள், பெண்கள், யாரும் செய்ய வேண்டாம் எனவும் அறிவுரை கூறினார். அது எந்த மாதிரியான தவறு என்பதை அனைவரும் ஷகீலா படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க என கூறியுள்ளார்.

ஷகீலாவின் பயோபிக்
இந்த திரைப்படம் ஆண்களுக்கு மட்டுமா அல்லது குடும்பத் தலைவிகளும் பார்க்கலாமா என்ற கேள்விக்கு, ஜெயம் படத்திற்கு பிறகு குடும்ப ரசிகர்கள் பார்க்கும் விதத்தில் கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தேன் இந்த படம் ஆண்களுக்கு மட்டுமல்ல என்னுடைய கதையை தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என பதில் கூறியுள்ளார்.

இன்னும் பல கேள்விகள்
"ஷகீலா" பயோபிக்கின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்னும் பல கேள்விக்கு ஷகீலா பதில் கூறியுள்ளார். அது மட்டுமன்றி தன்னுடைய அரசியல் வருகை பற்றியும் தகவல்களை கூறியுள்ளார். இந்த வீடியோவை பில்மி பீட்யூ டியூப் சேனலில் மிஸ் பண்ணாமல் கண்டுகளியுங்கள்.


Click it and Unblock the Notifications











