லியோ படத்துல விஜய் - த்ரிஷா லிப் லாக் அடிக்கலையா?.. ஆபாசக் காட்சியில் நடிக்கவே இல்லை.. ஷகிலா பேட்டி!
சென்னை: செய்தியாளர் முக்தார் நடத்தி வரும் யூடியூப் சேனலில் பங்கேற்ற காந்தராஜ் நடிகைகள் அனைவருமே அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது போலவும் அவர்கள் கட்டிப் பிடித்து முத்தக் காட்சிகளில் நடித்து விட்டு, யாராவது தன்னை தொட்டால் அவர்கள் பாலியல் தொல்லை என புகார் கொடுப்பது எல்லாம் வேடிக்கையான விஷயம் என்றும் சில சீனியர் நடிகைகள் ஆபாசமாக நடித்ததாகவும் மறைமுகமாக தாக்கி பேசியிருந்த நிலையில், நடிகை ரோகிணி அளித்த புகாரின் காரணமாக 5 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்ததாக நடிகை ஷகிலாவிடம் பேட்டி எடுக்கிறேன் என்கிற பெயரில் முக்தார் அவரிடம் அடுக்கிய கேள்விகளுக்கு ஷகிலா அளித்திருக்கும் பதில்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

மேலும், தான் ஆபாச படத்தில் நடித்தாலும் ஆபாசக் காட்சியில் ஒரு படத்தில் கூட நடிக்கவே இல்லை என்றும் ஷகிலா கூறியுள்ளார். அந்த பேட்டி வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆபாச காட்சியில் நடிக்கவே இல்லை: நடிகை ஷகிலா மலையாளத்தில் பல பி கிரேடு படங்களில் நடித்துள்ளார். பிட்டு படங்கள் என சொல்லப்படும் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட தியேட்டர்களில் ஷகிலா படங்கள் திரையிடப்படும். இந்நிலையில், தான் ஆபாசக் காட்சிகளிலேயே நடிக்கவே இல்லை என ஷகிலா முக்தாருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நிர்வாணமாக நடித்ததில்லை: தனது படங்களில் மற்ற பெண்களை நிர்வாணமாக நடிக்க வைத்து ஆபாச காட்சிகளை பிட்டாக இயக்குநர்கள் சொருகி ரிலீஸ் செய்வார்கள். ஆனால், நான் இதுவரை எந்தவொரு ஆபாசக் காட்சியிலும் நடிக்கவே இல்லை என ஷகிலா பேசியுள்ளார். மேலும், தற்போது ஹீரோயின்கள் பிகினி உடைகளில் எல்லாம் படுமோசமாக வருவது போன்று கூட நான் உடையணிந்து நடித்தது கிடையாது என்றும் பாவாடை, துண்டுக் கட்டிக் கொண்டு குளிக்கும் காட்சிகளில் மட்டும் தான் நடித்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

விஜய் - த்ரிஷா லிப் லாக்: மேலும், அந்த பேட்டியில் ஷகிலா பேசும் போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் - த்ரிஷா லிப் லாக் அடித்து எல்லாம் நடிக்கவில்லையா? அப்படித்தான் நான் நடித்ததும். நானும் சினிமா நடிகை தான். ஆபாச பட நடிகை இல்லை என்று பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
15 வயசுல என்ன தெரியும்: குடும்ப வறுமைக்காக சினிமாவில் ஆபாச படங்களில் நடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனக்கு உங்களை போல நல்ல அறிவுரைகளை கூறி வழி நடத்த எந்தவொரு அண்ணனும் இல்லை. 15 வயசுல இதெல்லாம் தப்பு எனக்கு அப்போது தெரியவில்லை என ஷகிலா கூறியுள்ளார். கஷ்டப்பட்டு உழைக்க எத்தனையோ தொழில்கள் இருந்தும் ஷகிலா ஏன் இப்படி இந்த தொழிலை தேர்வு செய்தீர்கள் என்றும் மோசமாக நடித்து தான் சம்பாதிக்க வேண்டுமா என முக்தார் அந்த பேட்டியில் ஷகிலாவை விளாசியுள்ளார். மேலும், ஷகிலா மனதளவில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதையும் எடுத்துக் கூறவும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்துக்கு மேல் தான் தனது படங்களில் நிர்வாணக் காட்சிகள் இடம்பெறுவதை அறிந்து அந்த படங்களில் நடிக்கப் போவதில்லை என விலகி விட்டதாகவும் ஷகிலா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











