கமல் கட்சியில் சேர விரும்பும் ஷகீலா சேச்சி: வெயிட்டு தான்
சென்னை: கமல் ஹாஸனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர ஆசைப்படுகிறார் நடிகை ஷகீலா.
ஷகீலா என்றாலே அவர் நடித்த கவர்ச்சி கதாபாத்திரங்கள் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் கேரளாவில் அவர் படம் வெளியாகிறது என்றால் சூப்பர் ஸ்டார்களே தங்களின் படங்களை வெளியிட அஞ்சுவார்கள்.
அந்த அளவுக்கு சேச்சிக்கு சேட்டன்கள் அமோக ஆதரவு கொடுத்து அவரின் படங்களை ஹிட்டாக்க வைத்தனர்.

படம்
ஷகீலாவுக்கு அரசியலுக்கு வரும் ஆசை ஏற்பட்டுள்ளது. அவர் ஏதோ ஒரு கட்சியில் சேர விரும்பவில்லை. தனக்கு மிகவும் பிடித்த நடிகரான கமல் ஹாஸனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர விரும்புகிறார். ஆண்டவர் கட்சிக்கு வெயிட்டான பார்ட்டி வரப் போகிறார் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் பேசத் துவங்கிவிட்டனர்.

கமல்
நான் கமல் ஹாஸனின் தீவிர ரசிகை. அவர் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவர் நடித்த படங்களை விரும்பிப் பார்ப்பேன் என்கிறார் ஷகீலா. நடிகைகள் மார்க்கெட் ஓய்ந்த பிறகு அரசியலுக்கு வருவது புதிது அல்ல. இந்நிலையில் தான் ஷகீலாவுக்கு கமல் கட்சியில் சேரும் ஆசை ஏற்பட்டுள்ளது.

கஷ்டம்
நான் கவர்ச்சியாக நடிப்பது மட்டுமே பலருக்கும் தெரியும். நான் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தது தெரியாது. என் குடும்பத்தாரால் தான் இப்படிப்பட்ட படங்களில் நடித்தேன். ஆனால் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை என் குடும்பத்தை சேர்ந்த ஒருவரே எடுத்துக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறி ஃபீல் பண்ணியுள்ளார் ஷகீலா.

நடிகை
கஷ்டம் தாங்க முடியாமல் ஷகீலா தற்கொலைக்கு கூட முயன்றுள்ளார். ஷகீலா என்றாலே ஆபாச நடிகை என்று முத்திரை குத்திவிட்டதாக அவர் வருத்தப்பட்டுள்ளார். அவரின் வாழ்க்கை வரலாறு படமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் ரிச்சா சட்டா ஷகீலாவாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











