Shakeela - அதுக்கு அமௌண்ட் வாங்குவாங்களா?.. டபுள் மீனிங்கில் பேசிய காத்து கருப்பு கலை.. கழற்றிவிட்ட ஷகீலா

சென்னை: Shakeela (ஷகீலா) தன்னை டபுள் மீனிங்கில் பேசிய காத்து கருப்பு கலையை நடிகை ஷகீலா பேட்டி ஒன்றில் கடுமையாக எச்சரித்தார்.

ஒருவரது கையில் ஸ்மார்ட் ஃபோனும், யூட்யூப் சேனலும் இருந்தால் போதும் இன்ஸ்டண்ட்டாக பிரபலம் ஆகிவிடலாம் என்ற நிலைதான் தற்போது இருக்கிறது. யூட்யூப் சேனலை ஆரோக்கியமாக பயன்படுத்தி அதில் வீடியோ பதிவேற்றுவர்களும் இருக்கிறார்கள்; அதை கோமாளித்தனமாகவும், ஆபாசமாகவும் பயன்படுத்தி வீடியோ பதிவேற்றுவர்களும் இருக்கிறார்கள்.

Shakeela Warns Youtuber Kaathu Karuppu Kalai in Recent Interview

காத்து கருப்பு கலை: அந்த இரண்டாம் ரகத்தை சேர்ந்தவர்தான் காத்து கருப்பு கலை. ஆரம்பத்தில் சின்ன சின்ன வீடியோக்களாக பதிவேற்றி கவனம் பெற்றவர் ஒருகட்டத்தில் ஆபாசமாகவும், டபுள் மீனிங்கில் பேசியும் வீடியோ பதிவேற்றினார். அவருக்கு உறுதுணையாக திருச்சி சாதனா என்பவரும் இருக்கிறார். இரண்டு பேரும் இரட்டை அர்த்தத்தில் பேசியும், பாடல் பாடி நடனம் ஆடியும் வீடியோக்களை பதிவேற்றிவருகின்றனர்.

கண்டனம்: அப்படி அவர்கள் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு வீடியோக்களை பதிவு செய்தபோது குறிப்பிட்ட சிலர் ரசித்தனர். அத்தோடு நிறுத்திவிடுவார்கள் என்று பார்த்தால் இரட்டை அர்த்தத்தில் பேசி வீடியோ பதிவேற்றுவதையே ஒருகட்டத்தில் வாடிக்கையாக மாற்றிவிட்டனர் இரண்டு பேரும். எல்லை மீறி சென்ற இருவருக்கும் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். அதேபோல் அவர்களை ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர்.

காத்து கருப்பு கலை பேட்டி: ஆனால் எதையும் மனதிலும், மூளையிலும் ஏற்றிக்கொள்ளாத இரண்டு பேரும் தொடர்ந்து அவ்வாறு வீடியோக்களை பதிவேற்றுகின்றனர். இந்தச் சூழலில் காத்து கருப்பு கலை தனியார் ஊடகத்தில் அளித்த பேட்டியில் ஷகீலாவிடமும் தன்னுடைய லீலையை காண்பித்தார். ஆனால் அதற்கு ஷகீலாவோ தக்க பதிலடி கொடுத்தார்.

என்ன பேசினார்?: அந்தப் பேட்டியில் பேசிய காத்து கருப்பு கலையிடம் ஷகீலா, 'இப்படி வீடியோ செய்வதற்கு சாதனா எதுவும் அமௌண்ட் வாங்குகிறாரா' என கேட்டார். அதற்கு பதிலளித்த கலை, 'அதுக்கு பேமெண்ட் வாங்குகிறார்களா என்பது தெரியாது. ஆனால் வீடியோவுக்கு பேமெண்ட் வாங்குகிறார் என கூறினார். இதனால் கடுப்பான ஷகீலா, "வேற எதுக்கு பேமெண்ட் வாங்குகிறாரானு உனக்கு தெரியாது. ரொம்ப வெகுளி மாதிரி நடிக்கிறியா?.நான் உன்னிட என்ன கேட்டேன் ஷூட்டிங்கிற்கு பேமெண்ட் தரியானுதான் கேட்டேன். அவள்ட்ட நீ டபுள் மீனிங்ல வெளாடு. எனட்ட வெளாடாத.

க்ளீனா பேசிட்டு இருக்கேன்: நான் உன்னிடம் க்ளீனா ஷூட்டிங்கிற்கு பேமெண்ட் வாங்குறாங்களானு கேட்டேன். அதுக்கு நீ என்ன சொல்லணும் வாங்குறாங்க, வாங்கலனு சொல்லணும். அதை விட்டுட்டு அதுக்கு வாங்குவாங்களானு தெரியாதுனு சொல்ற. ஒரு பெண்ணை பற்றி பேசுவதற்கு உனக்கு எந்த உரிமையுமே இல்லை. அவளே உனக்கு போனாபோதுனு வீடியோ செஞ்சு கொடுக்குறா. நீ ஏன் உன் வாயாலேயே மண்ண அள்ளிப்போட்டுக்குற' என கடுமையாக பேசினார்.

Shakeela Warns Youtuber Kaathu Karuppu Kalai in Recent Interview

எம்.பி தேர்தலில் நிற்பேன்: மேலும் பேசிய ஷகீலா, "நீ என்ன எந்த இடத்திலும் உண்மையே பேச மாட்டேங்குற. கண்ண பார்த்த உன்னால பேச முடியல. வாழ்க்கையே இப்படியே இருக்கும் என்று நினைக்கிறியா என கேட்டார். அப்போது குறுக்கிட்ட கலையோ, நான் எனது பெயரை மாற்றுவேன். மாற்றிவிட்டு எம்.பி. தேர்தலில் நிற்பேன்.

குப்பையை நானே போட்டு அதை நானே குப்பைத்தொட்டியில் போடுவது போல் வீடியோ எடுத்து அப்லோட் செய்து நல்ல பெயரை பெறுவேன்" என ஒரே போடாக போட்டார். அதற்கும் கோபமான ஷகீலா ஏன் நீயும் போயி குப்பைத்தொட்டில படுத்துக்க வேண்டியதுதானே என எதிர் கேள்வி கேட்டு ஆஃப் செய்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் காத்து கருப்பு கலை போன்ற ஆட்களை பேட்டியே எடுக்கக்கூடாது. அவர்களை ஏன் வளர்த்துவிட வேண்டும் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Read more about: shakeela ஷகீலா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X