கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது 'ஷகிலா' பயோபிக்.. சர்ச்சைக் காட்சிகள்.. மலையாள ஹீரோக்கள் கலக்கம்!

By

சென்னை: நடிகை ஷகிலாவின் பயோபிக்கான 'ஷகிலா', கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருக்கிறது.

தமிழில், ஜல்லிகட்டுக்காளை, உதவிக்கு வரலாமா, மறுமலர்ச்சி ஆகிய படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை ஷகிலா.

குளிர்காட்டு என்ற படம் மூலம் மலையாளத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தன.

அலை மோதியது

அலை மோதியது

ராக்கிளிகள், கின்னாரத் தும்பிகள் உட்பட அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு வரை தனது கவர்ச்சியால் மலையாள சினிமாவை கலக்கினார். இவரது படங்களைப் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. இவர் நடித்த படங்களின் வசூலும் அள்ளியது. பிரபல மலையாள முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்குத் தள்ளி வசூல் அள்ளின.

கெட்டுப் போகிறார்கள்

கெட்டுப் போகிறார்கள்

இது மலையாள முன்னணி ஹீரோக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஷகிலா படங்களால் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கேரளாவில் எதிர்ப்பு கிளப்பியது. அவரை மலையாள சினிமாவில் நடிக்க வாய்மொழியாக தடை பிறப்பித்தனர்.

வாழ்க்கை கதை

வாழ்க்கை கதை

பின்னர் அவர், தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வந்தார். இப்போது காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது வாழ்க்கை கதை சினிமாவாகி இருக்கிறது. இதில் ஷகிலாவாக பிரபல இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். பங்கஜ் திரிபாதி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்திரஜித் லங்கேஷ்

இந்திரஜித் லங்கேஷ்

கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் போதை பொருள் விவகாரத்தில் பல நடிகர், நடிகைகள் பெயரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்தவர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் ஆகி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது.

கிறிஸ்துமஸ் அன்று

கிறிஸ்துமஸ் அன்று

இந்தப் படம் கொரோனாவுக்கு முன்பே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். பின்னர் ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தியேட்டரில் வெளியிடவே விரும்புவதாக இயக்குனர் கூறியிருந்தார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் அன்று இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

Recommended Video

Malavika Bikini photos Challenges Young Heroines | Rakul Preet Maldives Vacation | Filmibeat Tamil
கலக்கத்தில் உள்ளனர்

கலக்கத்தில் உள்ளனர்

இதில் சர்ச்சைக் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் சில ஹீரோக்கள் ஷகிலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஷயங்களும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தங்கள் பெயர் பாதிக்கப்படலாம் என்று சில மலையாள ஹீரோக்கள் கலக்கத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X