திரைத் துளி
சென்னை:
ஆபாசமாக நடித்ததற்காக தொடரப்பட்ட வழக்கில் கவர்ச்சி நடிகை ஷகீலா கைது செய்யப்பட்டுவிட்டதாக நேற்று சென்னை முழுவதிலும் செய்தி பரவியது. ஆனால் வெறும் வதந்தி என ஷகீலாகூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ஷகீலா நடித்த ஒரு மலையாளப் படம் திரையிடப்பட்டிருந்தது. அந்தப்படத்திற்கு இடையே ஆபாசப் படமும் திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தத் தியேட்டருக்குபோலீஸார் சீல் வைத்தனர். மேலும், ஆபாசமாக நடித்ததாக ஷகீலா மீது வழக்கும் தொடரப்பட்டது.
ஷகீலாவின் "கலையுலக" வாழ்க்கையில் அவர் மீது போடப்பட்ட முதல் வழக்கு இது என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக நேற்று ஷகீலா கைது செய்யப்பட்டதாகசெய்தி பரவியது.
இதுதொடர்பாக ஷகீலாவிடம் கேட்டபோது, இது வெறும் வதந்திதான்.
என்னை யாரும் கைதுசெய்யவில்லை. வீட்டில்தான் இருக்கிறேன்.
இதுவரை ஒரு போலீஸ்காரர் கூட வந்து என்னைவிசாரிக்கவில்லை.
தொடர்ந்து பல்வேறு படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளேன் என்றுகூறினார்.
மலையாளத் திரையுலகை சில காலமாக தனது கவர்ச்சி நடிப்பால் கலக்கி வந்த ஷகீலா தற்போதுஅங்கிருந்து தமிழ்த் திரையுலகுக்கு வந்துள்ளார்.
இங்கு சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால்கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











