»   »  ஷகீலாவுக்கு கல்யாணம்? ஹாட் ஸ்டார் ஷகீலா ரசிகர்களே, சறறே உங்களது மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்! உங்கள் அபிமான ஷகீலாவுக்குவிரைவிலேயே கல்யாணம் நடைபெறப் போகிறது. மாப்பிள்ளை ரெடி, டும் டும் மட்டும்தான் பாக்கி!

ஷகீலாவுக்கு கல்யாணம்? ஹாட் ஸ்டார் ஷகீலா ரசிகர்களே, சறறே உங்களது மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்! உங்கள் அபிமான ஷகீலாவுக்குவிரைவிலேயே கல்யாணம் நடைபெறப் போகிறது. மாப்பிள்ளை ரெடி, டும் டும் மட்டும்தான் பாக்கி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாட் ஸ்டார் ஷகீலா ரசிகர்களே, சறறே உங்களது மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்! உங்கள் அபிமான ஷகீலாவுக்குவிரைவிலேயே கல்யாணம் நடைபெறப் போகிறது. மாப்பிள்ளை ரெடி, டும் டும் மட்டும்தான் பாக்கி!

ஒல்லிக் குச்சி உடம்புக்காரியாக இருந்தபோது தமிழ் சினிமாவில் பாட்டுக்களுக்கு மட்டும் வந்து ஆடிப் போகும் கவர்ச்சிநடிகைகளில் ஒருவராகத்தான் இருந்தார் ஷகீலா. அவரது ஆட்டம் தமிழ் ரசிகர்களால் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை,கவனிக்கப்படவில்லை.

ஆனால் மலையாளத் திரையுலகினர் ஷகீலாவை சரியாகப் புரிந்து கொண்டு அவரை அங்கு இழுத்துக் கொண்டனர். மிட்நைட்மசாலா படங்களில் ஷகீலா தனது திறமையைக் காட்டத் தொடங்கினார். அவரது கிளாமருக்கு அங்கு படு கிராக்கி ஏற்படத்தொடங்கியது. பூச்சி மாதிரி இருந்த ஷகீலா பூசணிக்காய் மாதிரி உப்பி, கவர்ச்சித் திலகமாக மாறி ஏகப்பட்ட ஏ படங்களில்நடித்து கலக்கத் தொடங்கினார்.


பிரமாண்ட ஷகீலாவின் கவர்ச்சி புயலில் சிக்கி ரசிகர்கள் திக்குமுக்காடிப் போய், அவரது படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள்முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடந்தது ஒரு காலம். இப்போதும் ஷகீலா படம் என்றால் இளசுகள் முதல் பெருசுகள் வரைகிளுகிளுக்கத்தான் செய்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் படங்களையே ஓரம் கட்டத் தொடங்கியது ஷகீலாவின் சாப்ட் போர்னோ ரக படங்கள். மற்றபடங்களைப் போடுவதை விட ஷகீலா நடித்த படங்களைப் போட்டு சல்லிசாக காசு பார்க்கத் தொடங்கினர் கேரளதியேட்டர்காரர்கள்.

ஷகீலாவின் வியாபித்த ஆக்கிரமிப்பைப் பார்த்து அரண்டு போன மலையாள திரையுலகினர் ஷகீலாவின் படங்களுக்கு தணிக்கைச்சான்றிதழ் வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தணிக்கைக் குழுவினைரைக் கேட்டுக் கொண்டனர். அரசுக்கும்கோரிக்கை விடுத்தனர்.

இதனால் ஷகீலா பலமுனைத் தாக்குதலுக்கு ஆளானார். தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிப்பதை விட்டு விட்டார். தனதுவளர்ச்சியைப் பொறுக்க முடியாத சில நடிகர்கள் என்னை விரட்டுவதில் குறியாக உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்,சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பிய அவர் தமிழ்ப் படங்களில் காமெடியுடன் கூடிய கிளாமர் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால்யானைப் பசிக்கு சோளப் பொறி போல, பிசியாக இருந்து பழக்கப்பட்ட அவருக்கு தமிழ் திரையுலகம் தந்த வாய்ப்புகள்திருப்தியைத் தரவில்லை. இருந்தாலும் தொடர்ந்து குட்டி குட்டி ரோல்களில் நடித்து வந்தார்.


இந்த நிலையில் தமிழ்ப் பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. ஆனால் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வந்ததால்ஒரேயடியாக வீட்டோடு அவர் உட்கார்ந்து விடவில்லை. இப்போது அதுவும் நின்று போய் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டியநிலை வந்து விட்டது.

இந்த நேரத்தில்தான் ஷகீலா ஒரு குண்டைப் போட்டார். தான் மலையாளப் படங்களில் நடித்தபோது கிடைத்த அனுபவத்தை,தன்னிடம் மற்ற நடிகர்கள், பிரமுகர்கள் நடந்து கொண்ட வித்தை, புத்தகமாக வெளியிடப் போகிறேன் என்று அறிவித்துபரபரப்பூட்டினார். இதனால் ஷகீலாவிடம் தோழமை கொண்ட மலையாள திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறுதரப்பினரும் கிலியடைந்தனர்.

ஆனால் அந்த பரபரப்பு நாளடைவில் அடங்கிப் போனது. சமீப காலமாக ஷகீலாவைப் பற்றிய தகவலையேக் காணோம். இந்தநேரத்தில் இன்னொரு செய்தி பரவத் தொடங்கியது. ஷகீலா தன்னுடன் மலையாளப் படங்களில் நடித்த ஸ்டண்ட் நடிகர்ஒருவரைக் காதலிப்பதாகவும், அவருடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துவதாகவும் செய்திகள் வந்தன.

இருவரும் சேர்ந்து குறும்படங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூட செய்திகள் வந்தன. என்னமாதிரியான குறும்படங்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த செய்தி கொஞ்ச காலம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது இன்னொரு செய்தி ஷகீலா பற்றி உலவத் தொடங்கியுள்ளது. காதலித்து வரும் ஸ்டண்ட் நடிகரையே ஷகீலா திருமணம்செய்து கொள்ளப் போகிறார் என்றும், விரைவில் அவர்களது திருமணம் முறைப்படி நடக்கவுள்ளதாகவும் இந்த லேட்டஸ்ட் செய்திகூறுகிறது.


இந்தக் கல்யாணத்துக்கு காதலரின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருப்பதாகவும், ஆனால் அதை காதலர்கள் இருவரும்பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. விரைவில் தனது கல்யாண அறிவிப்பை ஷகீலா வெளியிடக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை காலம் உழைத்தது போதும், இனிமேலாவது நிம்மதியாக குடும்ப வாழ்க்கையை நடத்தலாம் என்ற முடிவுக்கு ஷகீலாவந்து விட்டார் என்பதையே இது உணர்த்துவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எப்படி இருந்தாலும் வாழ்க! என்று வாழ்த்துவோம்!


Read more about: shakeela to marry her lover

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil