ஆன்லைனில் ரிலீஸ் ஆகிறது.. சென்சார் தடை விதித்த ஷகிலாவின் அடல்ட் காமெடி படம்.. ரூ. 50 கட்டணம்!

By

சென்னை: நடிகை ஷகிலா தயாரித்து நடித்துள்ள அடல்ட் காமெடி படம் வரும் 20 ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது.

தமிழில் ஜல்லிகட்டுக்காளை, உதவிக்கு வரலாமா, மறுமலர்ச்சி உட்பட பல படங்களில் நடித்துள்ள ஷகிலா, குளிர்காட்டு என்ற படம் மூலம் மலையாளத்துக்குச் சென்றார்.

அங்கு ராக்கிளிகள், கின்னாரத் தும்பிகள் உட்பட அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

2000 ஆம் ஆண்டு வரை தனது கவர்ச்சியால் மலையாள சினிமாவை கலக்கினார். இவரது படங்களைப் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. இவர் நடித்த படங்களின் வசூலும் அள்ளியது. பிரபல மலையாள முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்குத் தள்ளி வசூல் அள்ளின. தென்னிந்திய ரசிகர்களை தனது கவர்ச்சியினால் கிறங்கடித்த அவர் இப்போது காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

அடல்ட் காமெடி

அடல்ட் காமெடி

இடையில் வறுமையில் வாடிய ஷகிலா, தனது கஷ்டத்தில் இருந்து மீண்டு சிலருடன் இணைந்து, லேடீஸ் நாட் அலவ்டு என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ஹேண்ட் ஜாப் கேபின் என்ற அடல்ட் காமெடி படத்தைத் தழுவி உருவாகியுள்ள தெலுங்கு படம், இது. சாய்ராம் தாசரி என்பவர் இயக்கி உள்ளார். இதன் இணை தயாரிப்பாளரான ஷகிலா, கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.

பாலியல் வேட்கை

பாலியல் வேட்கை

சுற்றுலா செல்லும் காதல் தம்பதிகள் ஒரு வீட்டில் தங்குகிறார்கள். அங்கு பாலியல் வேட்கை கொண்ட பெண் பேய், காதலர்களை சேர விடாமல் தடுக்கிறது. பிறகு காதலன்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் வெளியான போது கடும் எதிர்ப்பு கிளப்பியது. இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழு அதிர்ச்சி அடைந்தது.

தடை விதித்தனர்

தடை விதித்தனர்

ஆபாசமாக இருப்பதாகக் கூறி படத்துக்குத் தடை விதித்தது. இதனால் ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு சென்றனர். அவர்களும் படத்துக்குத் தடைவிதித்தனர். தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து ஷகிலா கூறும்போது, 'இந்தப் படத்தை அடல்ட்ஸ் ஒன்லி படமாகதான் தயாரித்துள்ளோம். ஆரம்பத்தில் இருந்தே அதை தெளிவாக தெரிவித்து வருகிறோம்.

ஆன்லைன் ரிலீஸ்

ஆன்லைன் ரிலீஸ்

இருந்தும் எங்கள் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். சில தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக என்னிடம் சொன்னார்கள். இந்தப் படத்தை நாங்கள் கடன் வாங்கி எடுத்திருக்கிறோம். பலருடைய உழைப்பும், முதலீடும் இந்த படத்தில் இருக்கிறது' என்று ஷகீலா கூறியிருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தை ஆன்லைனில் வெளியிடுகின்றனர்.

Recommended Video

'Jayam' Suman Shetty யின் தற்போதைய நிலை? | 7G Rainbow Colony
கொரோனா

கொரோனா

இன்னும் தணிக்கை சான்று கிடைக்காத நிலையில், இந்த கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, வெளியிடுகின்றனர். இதற்காக www.Ladiesnotallowed.com -என்ற தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளனர். அதில் ரூ.50 கட்டணம் செலுத்தி இந்தப் படத்தைப் பார்க்கலாம். படத்தில் ஆங்கில சப் டைட்டிலும் இடம்பெறுகிறது. இந்தப் படம் வரும் 20 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ரிலீஸ் ஆகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X