சக்தி திருமகன்.. அந்த தேதியில் ரிலீஸ் பண்ணி எதுக்கு பல்ப் வாங்கணும்.. பின் வாங்கிய விஜய் ஆண்டனி!
சென்னை: விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருந்தது. அதே தேதியில், அருண் பிரபு இயக்கிய சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படமும் வெளியாக இருந்தது. இதனால், இரண்டு திரைப்படமும் மோத இருந்த நிலையில், சக்தி திருமகன் படத்தின் ரிலீஸ் மாற்றப்பட்டுள்ளது.
இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, இசையமைப்பதுடன், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். நான் திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறிய விஜய் ஆண்டனி, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், கோடியில் ஒருவன், ரத்தினம், திமிருபிடிச்சவன், கொலை, ஹிட்லர் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து வருகிறார்.

மார்கன்: விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'மார்கன்'. அட்டக்கத்தி, சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய வியோ ஜான் பால் மார்கன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகமானார். க்ரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. இதில், அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'சக்தி திருமகன்'. இந்தத் திரைப்படத்தை அருவி, வாழ் படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராக படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
தேதி மாற்றம்: அதே தேதியில், ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'. இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதன்முறையாக விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத இருந்த நிலையில், சக்தித் திருமகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இத்திரைப்படம், செப்டம்பர் 19ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











