என்னது சக்திமான் செத்துட்டாரா? வைரலான வதந்தி.. கொரோனாவும் இல்லை.. சாகவும் இல்லை என வெளுத்த நடிகர்!
மும்பை: 90ஸ் கிட்ஸ்களின் முதல் சூப்பர் ஹீரோ சக்திமானாக நடித்து பிரபலமானவர் நடிகர் முகேஷ் கன்னா.
கொரோனா பரவல் காரணமாக தினந்தோறும் பொது மக்களுடன் சேர்ந்து சினிமா பிரபலங்களும் பலியாகி வருகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில பிரபலங்கள் மரணித்து விட்டதாக வதந்திகளையும் விஷமிகள் பரப்பி வருகின்றனர்.

சக்திமான் செத்துட்டாரா
சக்திமான், மகாபாரதம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் முகேஷ் கன்னா கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் என்கிற வதந்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவின. இதனை அறிந்த நடிகர் முகேஷ் கன்னா அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா இல்லை
கொரோனா பாதிப்பு காரணமாக 62 வயதான நடிகர் முகேஷ் கன்னா காலமாகி விட்டார் என பரவிய வதந்தியை அறிந்து மிகவும் வேதனைப்பட்ட அவர், தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. மேலும், எந்த மருத்துவமனையிலும் தான் அனுமதிக்கப்படவில்லை. ரசிகர்களின் ஆசிர்வாதத்தோடு உடல் ஆரோக்கியத்துடனே உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

என்ன ட்ரீட்மென்ட் இருக்கு
தனது ஃபேஸ் புக் பக்கத்தில் இது தொடர்பாக நேற்று (செவ்வாய் கிழமை) வீடியோ வெளியிட்ட நடிகர் முகேஷ் கன்னா, இது போன்ற கேவலமான வதந்திகளை பரப்புபவர்களுக்கு ஏதாவது ட்ரீட்மென்ட் இருக்கா என்றும் கேட்டு விளாசி உள்ளார். இந்த இக்கட்டான சூழலில் இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும், சரியான தகவல் தெரியாமல் பகிர வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மனதை பாதிக்கும்
மூத்த நடிகர்களை இது போன்ற மரண வதந்திகள் மிகவும் பாதிக்கும் என்றும், சில விஷமிகளின் விளையாட்டுத் தனத்தால் அந்த பிரபலமும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்றும் இது போன்ற வீண் வதந்திகளை பரப்ப கூடாது என்றும் கூறியுள்ளார்.

லக்கி அலி
முன்னதாக பாடகர் லக்கி அலியும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்கிற வதந்தி தீயாய் பரவியது. அதை அறிந்த அவர், உடனடியாக உடல் ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளேன். வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











