twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    1980-ல் 'சகுந்தலா தேவி'க்கு அறிவிக்கப்பட்ட கின்னஸ் சர்டிபிகேட்.. வித்யா பாலன் உதவியால் ரீச் ஆனது!

    By
    |

    மும்பை: கணித மேதை சகுந்தலாதேவிக்கு 40 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட கின்னஸ் சாதனை சர்டிபிகேட் இப்போதுதான் கிடைத்துள்ளது.

    பெங்களூரைச் சேர்ந்தவர், சகுந்தலா தேவி. முறையான கல்வி பெறாமல், தானாகக் கணக்குகளைத் தீர்க்கப் பழகியவர்.

    கஷ்டமான கணக்குகளுக்கு கூட சில நொடிகளில், மனக்கணக்கில் தீர்வுகாண்பதில் வல்லவர்.

    மாஸ் அப்டேட்.. புஷ்பாவுக்கு அடுத்து.. அல்லு அர்ஜுனின் 21வது படம்.. இயக்குநர் யார் தெரியுமா?மாஸ் அப்டேட்.. புஷ்பாவுக்கு அடுத்து.. அல்லு அர்ஜுனின் 21வது படம்.. இயக்குநர் யார் தெரியுமா?

     கின்னஸ் சாதனை

    கின்னஸ் சாதனை

    இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்த இவர், 2013-ம் ஆண்டு தனது 83 வயதில் மரணமடைந்தார். உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் இவர், கடந்த 1980ஆம் ஆண்டு லண்டனில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது 13 இலக்க எண்கள் இரண்டை 28 விநாடிகளில் பெருக்கி விடை அளித்து அனைவரையும் அசத்தினார். இது கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது.

     நடிகை வித்யா பாலன்

    நடிகை வித்யா பாலன்

    அறிவிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகியும் சான்றிதழை கின்னஸ் நிறுவனம் கொடுக்கவில்லை. இந்நிலையில் சகுந்தலா தேவியின் வாழ்க்கை கதை சினிமாவாகி இருக்கிறது. சகுந்தலா தேவியாக, நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். அனுமேனன் படத்தை இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா தயாரித்துள்ளார்.

     அமேசானில் ரிலீஸ்

    அமேசானில் ரிலீஸ்

    இந்தப் படத்தில், நடிகை சன்யா மல்ஹோத்ரா, ஜுஸு சென்குப்தா, அமித் சாத் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக இருந்தது. லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் திறப்பதற்கு காலதாமதமாகும் என்பதால், இதன் தயாரிப்பாளர்களும் ஒடிடி-யில் படத்தை வெளியிட்டுள்ளனர். அமேசான் பிரைமில் இந்தப் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

     அனுபமா பானர்ஜி

    அனுபமா பானர்ஜி

    இதன் படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது நடிகை வித்யா பாலன், கின்னஸ் நிறுவனத்திடம் சகுந்தலா தேவிக்குக் கொடுக்க வேண்டிய கின்னஸ் சான்றிதழ் பற்றிப் பேசியுள்ளார். இதையடுத்து அந்த நிறுவனம் இப்போது, அனுப்பி உள்ளது. அந்த சான்றிதழை அவர் மகள் அனுபமா பானர்ஜி பெற்றுள்ளார். 40 ஆண்டுகள் கழித்து தனது அம்மாவுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Shakuntala Devi’s Guinness World Record certificate finally reaches home
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X