சுதா கொங்கரா ஒரு Fraud.. ஆவேசமாக விமர்சித்த பெண் பிரபலம்.. வக்காலத்துக்கு வரும் விஜய் ரசிகர்கள்

சென்னை: பராசக்தி படம் வெளியாகி இன்றோடு ஐந்து நாட்கள் ஆகிறது. முதல் இரண்டு நாட்கள் பாக்ஸ் ஆபீஸில் நன்றாக ஒர்க்-அவுட் ஆன பராசக்தி, அதன் பின்னர் வார நாட்கள் தொடங்கியதும் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் வசூல் குவிக்கவில்லை. இப்படி இருக்கையில் படத்திற்கு எதிரான விமர்சனங்கள் இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் படத்தைப் போட்டு அடி அடி என்று அடித்து வருகிறர்கள்.

இப்படி இருக்கையில் சுதா கொங்கரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் ரசிகர்கள் என்று நேரடியாக பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார். அதாவது, நாங்கள் மோசமான ரவுடிகள் மற்றும் குண்டர்களை கடந்து தான், அவர்கள் கொடுக்கும் சவால்களையும் நெருக்கடிகளையும் கடந்துதான் படத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணிகளை செய்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார். அவரது இந்த கருத்து பெரும்பாலான விஜய் ரசிகர்கள் கோபத்தை தூண்டியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் சுதா கொங்கராவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Shalin Maria Lawrence Slams Parasakthi Movie Director Sudha Kongara as Fraud Vijay Fans Supports Her

ஷாலின் மரியா லாரன்ஸ்: இந்நிலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான ஷாலின் மரியா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் சுதா கொங்கராவை கடுமையாக சாடி உள்ளார். அதாவது, " சுதா நீங்கள் ஒரு Fraud. நீங்கள் எடுத்தது மோசமான படம். அதை ஒப்புக் கொண்டு நகருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை விஜய் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

விஜய் ரசிகர்கள் ஆதரவு: அவரது இந்த பதிவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இணையவாசிகள் குறிப்பாக விஜய் ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், சுமார் மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான இணையவாசிகள் லைக்குகளை பறக்கவிட்டு வருகிறார்கள். சுமார் 800 பேர் ரீ ட்வீட் செய்துள்ளார்கள். ஷாலின் மரியா லாரன்ஸ் தொடர்ந்து பராசக்தி படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது இந்த பதிவுகள் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Shalin Maria Lawrence Slams Parasakthi Movie Director Sudha Kongara as Fraud Vijay Fans Supports Her

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X