மகளோடு விக்ரம் படத்தை பார்த்த ஷாலினி அஜித்.. என்ன எளிமையா இருக்காங்க!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையிடப்பட்டுள்ளது விக்ரம் படம்.

இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்து சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் படத்திற்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா என நட்சத்திர பட்டாளமே நடித்து நேற்றைய தினம் வெளியாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படம் முன்னதாக ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து நல்ல விமர்சனங்களை தற்போது பெற்று வருகிறது.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

படம் வெளியான அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். லோகேஷ் கனகராஜுக்கு இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் அதிகமாகியுள்ளனர். அடுத்தடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை ஹிட்டாக்கியுள்ளார் லோகேஷ். தொடர்ந்து விஜய் படத்தை அவர் இயக்கவுள்ளதும் அவரது மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.

தொடரும் பாராட்டு

தொடரும் பாராட்டு

விக்ரம் படத்திற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து படத்திற்கு சிறப்பான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் கொடுத்து வருகின்றனர். படம் கமல் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

Vikram Review | Yessa ? Bussa ? | Kamal Haasan #Review
விக்ரம் படம் பார்த்த ஷாலினி -அனொஷ்கா

விக்ரம் படம் பார்த்த ஷாலினி -அனொஷ்கா

இந்நிலையில் இந்தப் படத்தின் செலபிரிட்டி ஷோ, நேற்று மாலை சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த ஷோவை பிரபல நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனொஷ்கா இருவரும் கண்டு களித்தனர். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

அதிகமான ரசிகர்கள்

அதிகமான ரசிகர்கள்

இதேபோல ஷாலினி விஜய்யின் பீஸ்ட் படத்தின் சிறப்பு காட்சியையும் திரையரங்கில் வந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பான ஒரு சில படங்களில் நடித்துள்ள ஷாலினிக்கு இப்போதும் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, அஜித்தை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஷாலினி. ஆனால் திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பை கைவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X