Vijay Ajith: விஜய்யும் அஜித்தும் அப்படித்தான்.. ஷாலினி பகிர்ந்த அந்த விஷயம் என்ன தெரியுமா?
சென்னை: நடிகை ஷாலினி தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவே மிஸ் செய்யும் நடிகை. நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகியவர் தனது குடும்பம், குழந்தைகள் என்று செட்டில் ஆகிவிட்டார். சமீப காலமாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஷாலினி சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது கணவரும் நடிகருமான அஜித் மற்றும் நடிகர் விஜய் என இருவருக்கும் இடையிலான நட்பு குறித்து பேசி உள்ளார்.
அஜித் மற்றும் விஜய் என இருவரும் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் தங்களது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல் நேருக்கு நேர் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டு, அதன் பின்னர் அஜித் அந்த படத்தில் இருந்து விலகினார்.

இருவருமே தமிழ் சினிமாவில் சரியான போட்டியாளராக மாறினார்கள். இவர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி அஜித் - விஜய் என்ற நிலையை உருவாக்கினார்கள். இவர்களுக்காக ரசிகர்களுக்கு இடையில் எல்லாம் சண்டைகள் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அஜித் தனது சினிமாவில் இப்படியான போட்டியால் எந்த பயனும் இல்லை என்று முடிவெடுத்து, தனது சினிமா வாழ்க்கையை வேறு மாதிரி கட்டமைத்தார். இன்னும் சொல்லப்போனால், தனது ரசிகர்கள் மன்றத்தை கலைத்து விட்டு, போய் குடும்பத்தை பாருங்கள் என்று அறிவுரை கூறி விட்டார்.
ஷாலினி: இப்படி இருக்கையில் விஜய் - அஜித் என இருவரது நட்பு குறிப்பாக அவர்களுக்கு இடையிலான உறவு குறித்த பேச்சுக்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக பலரும் தெரிவித்தாலும், இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர்கள் கூறும்போது அவை பெரும் கவனத்தை ஈர்க்கிறது. அந்த வகையில் நடிகை ஷாலினி தான் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியான விருது வழங்கும் நிகழ்ச்சியில் அஜித் மற்றும் விஜய் என இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அஜித் - விஜய்: அதில் அவர், " அஜித் மற்றும் விஜய் என இருவருக்கும் இடையில் நல்ல நட்பு எப்போதுமே இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் எப்போதுமே அவர்களின் வெற்றிகள் தொடங்கி முன்னேற்றங்கள் என அனைத்திற்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். நடிகை ஷாலினி இவ்வாறு தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications