Ajith Kumar: இந்த பொங்கல் தல பொங்கல் தான்.. ஷாலினி வெளியிட்ட செம அறிவிப்பு.. அஜித் கார் ரேஸ் எப்போ?
சென்னை: நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகை ஷாலினி ஆஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளார். மோட்டார் பைக்கில் உலகம் சுற்றும் வாலிபனாக பல நாடுகளுக்கு சென்று வந்த அஜித் குமார் அடுத்ததாக கார் பந்தயத்திலும் பங்கேற்க ரெடியாகி விட்டார்.
நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலுக்கு செல்ல உள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் தனக்குப் பிடித்த ரேஸிங்கில் ஆர்வத்தை அதிகம் செலுத்தி வருகிறார். வரும் பொங்கலுக்கு குட் பேட் அக்லி படம் மட்டும் அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்த போவதில்லை.

அதையும் தாண்டி ஜனவரி மாதம் நடக்கவுள்ள கார் பந்தயத்தில் அஜித் குமார் கலந்துக் கொள்ளப் போகிறார் என்கிற அறிவிப்பு தற்போது தல ரசிகர்களை தலைகால் புரியாத அளவுக்கு தாண்டவமாட வைத்துள்ளது.
மீண்டும் ரேஸுக்கு ரெடியான அஜித்: இளம் வயதில் இருந்தே பைக் மற்றும் கார் பந்தயங்களில் அதிக ஆர்வம் செலுத்தி வந்த அஜித் குமார் கார் பந்தயத்தின் போது விபத்தில் சிக்கிய நிலையில் அவருக்கு முதுகு தண்டில் அறுவை சிகிச்சை எல்லாம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் தான் ரேஸை விட்டு சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில், வரும் ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஷாலினி அறிக்கை: நடிகர் அஜித் குமாருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்டு அஜித் ரசிகர்களை பித்துப் பிடிக்க செய்து வரும் நடிகை ஷாலினி தற்போது அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கப் போகும் அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Formula BMW Asia, British Formula 3 மற்றும் FIA F2 உள்ளிட்ட கார் பந்தயங்களில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என்றும் கார் பந்தயங்களில் பங்கேற்க அஜித் தனியாக ஒரு டீமையே உருவாக்கியுள்ளார் என்கிற அறிவிப்பையும் இது அவரது போல்டான முடிவு என்றும் அவருக்கு பிடித்ததை மீண்டும் செய்ய தீர்மானித்துள்ளார் என ஷாலினி குறிப்பிட்டுள்ளார்.
தல பொங்கல்: வரும் 2025ம் ஆண்டு பொங்கல் தல பொங்கல் தான் என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தின் காட்சிகள் லீக் ஆன நிலையில், பில்லா இன்னும் சாகல என ரசிகர்கள் அதை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜனவரி 10 மற்றும் 11ம் தேதி துபாயில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் அஜித் பங்கேற்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
அப்டேட் திருவிழா: அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், இனிமேல் டிரம்ப் வரை சென்று அப்டேட் கேட்க வேண்டாம் என்றும் ஷாலினியே அஜித் பற்றிய அப்டேட்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











