ஷாலினி அஜித் என்ன போன் வச்சிருக்கிறார் தெரியுமா?: தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
Recommended Video

சென்னை: அஜித்தின் மனைவி ஷாலினி பயன்படுத்தும் செல்போனை பார்த்துவிட்டு வியக்காதவர்களே இல்லை.
அஜித்தின் மனைவி ஷாலினி மகன்ஆத்விக், மகள் அனோஷ்காவுடன் வெளியே வரும்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க விரும்பினால் போஸ் கொடுக்கிறார். அப்படி அவர் அண்மையில் தனது மகனுடன் வெளியே வந்தபோது தல ரசிகர் ஒருவர் அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளார்.

அந்த செல்ஃபியை பார்த்தவர்களுக்கும் வியப்பும், அதிர்ச்சியுமாக இருந்தது. காரணம் ஷாலினி நோக்கியா 3310 செல்போனை கையில் வைத்திருந்தார். அந்த போனின் விலை ரூ. 3, 200 ஆகும்.
தற்போதுள்ள இளசுகளிடம் அந்த போனை கொடுத்தால் இதை எல்லாம் யார் பயன்படுத்துவார்கள் என்று தூக்கி வீசிவிடுவார்கள். ஆனால் கோலிவுட்டின் முன்னணி நடிகரின் மனைவி அந்த போனை தான் பயன்படுத்துகிறார்.
அஜித்தை போன்றே ஷாலினியும் சிம்பிளானவர். அஜித்தும் சாதாரண போன் பயன்டுபடுத்துவதாக அவருன் நடித்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











