வாரேவா… அக்காவும் தங்கையும் என்னம்மா இருக்காங்க… இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகை ஷாலினி தனது தங்கையுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபிஷாலினி, பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார்.

Shalini Ajith Shared a picture with her sister Shamlee

அதன்பின் ஹீரோயினாக விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அடுத்தடுத்த படங்களில்: காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றிக்கு பிறகு அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஹிட் படங்களில் நடித்தார். இரண்டாவது படத்திலேயே அஜித்துடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அமர்க்களம் படத்தில் ஷாலினி நடிகையாக மட்டுமில்லாமல், சொந்தக்குரலில் பாட என்ற பாடலையும் பாடி பாடகியாகவும் மாறினார்.

காதல் திருமணம்: அஜித் ஷாலினியிடம் காதலை சொல்ல அதை ஷாலினி ஏற்றுக்கொண்டதை அடுத்து 2000ம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு எட்டு ஆண்டுகள் கழித்து அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர். தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா அப்பா,அம்மாவை விட வளர்ந்து செம க்யூட்டாக இருக்கிறார்.

Shalini Ajith Shared a picture with her sister Shamlee

வாரேவா: நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து அவ்வப்போது தனது கணவர் புகைப்படத்தையும், குழந்தைகள் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது ஆசை தங்கை ஷாமிலிடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஷாலினி கருப்பு நிற சுடிதாரிலும், ஷாமிலி வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் சல்வாரிலும் செம க்யூட்டாக உள்ளனர்.

Shalini Ajith Shared a picture with her sister Shamlee

கதாநாயகியாக: நடிகை ஷாமிலி மணிரத்னம் இயக்கி அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன்பிறகு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த ஷாமிலி, சித்தார்த்துடன் தெலுங்கில் ஏய் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து வீரசிவாஜி படத்தில் கதாநாயகியாக கடைசியாக நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X