அஜித்தை ஸ்டைலாக கேமராவில் சிறைபிடித்த ஷாலினி அஜித்.. க்யூட் போட்டோ!

சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

அஜித்தின் ஏகே62 படத்தை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளை கடந்து தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரது பல படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை இவருக்கு கொடுத்துள்ளது. இது மட்டுமில்லாமல் வெறித்தனமான ரசிகர்களையும் அஜித்தின் படங்கள் அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளன.

அஜித்தின் துணிவு படம்

அஜித்தின் துணிவு படம்

இந்நிலையில் தொடர்ந்து தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அஜித். நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தின்மூலம் இணைந்திருந்தார் அஜித். இந்தப் படம் கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது.

ஏகே 62 படம்

ஏகே 62 படம்

துணிவு படம் தற்போது 25 நாட்களை வெற்றிகரமாக திரையரங்குகளில் கடந்து ஓடி வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது ஏகே 62 படத்திற்காக அஜித் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஏகே62 படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் ஏகே62 அறிவிப்பு?

விரைவில் ஏகே62 அறிவிப்பு?

இதுகுறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகி சூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், அஜித்தின் படத்தின் அறிவிப்பும் ரசிகர்களின் மிகுதியான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

அஜித் -ஷாலினி தம்பதி

அஜித் -ஷாலினி தம்பதி

தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னுடன் நடித்த ஷாலினியை திருமணம் செய்துக் கொண்டார் அஜித். இவர்களுடைய வாழ்க்கை மிகவும் இனிமையாக கழிந்துவரும் நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஷாலினி இணைந்துள்ளார். தானும் தன்னுடைய கணவர் அஜித்தும் இணைந்துள்ள புகைப்படங்களை இவர் பதிவிட்டு வருகிறார்.

கணவரை படம்பிடித்த ஷாலினி

கணவரை படம்பிடித்த ஷாலினி

இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவர் அஜித்தை தான் அழகாக படம்பிடித்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஷாலினி பகிர்ந்துள்ளார். பின்புலத்தில் அழகான சூரிய உதயத்தையும் சேர்த்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் அஜித் மிகவும் ஸ்டைலாக காணப்படுகிறார்.

 அடுத்தடுத்த புகைப்படங்கள்

அடுத்தடுத்த புகைப்படங்கள்

மேலும் தன்னுடைய சூரிய ஒளி என்றும் தன்னுடைய கணவர் அஜித்தை ஷாலினி குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த இரு புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு டிடி உள்ளிட்டவர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X