20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஷாலினி...யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா ?

சென்னை : 1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஷாலினி. 1997 ம் ஆண்டு மலையாளத்தில் ஃபாசில் இயக்கிய அனியாத பிறவு படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
பின்னர் இந்த படம் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் வெளிவந்தது. விஜய்க்கு ஜோடியாக தமிழில் ஹீரோயினாக ஷாலினி அறிமுகமான இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தமிழில் பிஸியான நடிகையானார் ஷாலினி.

Shalini Ajith to act after twenty years in a mega movie?

10 படங்களில் ஹீரோயினாக நடித்த ஷாலினிக்கும், அஜித்திற்கும் அமர்க்களம் படம் நடித்த போது காதல் ஏற்பட்டது. அதன் பிறகு 2000 ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனவுஸ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

2001 ம் ஆண்டு பிரசாந்த்துடன் நடித்த பிரியாத வரம் வேண்டும் தான் ஷாலினி கடைசியாக நடித்த படம். அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர், குடும்பத்தை கவனித்து வந்தார்.

தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இது சிறிய கேரக்டர் ஆனாலும், மிக முக்கியமான கேரக்டர் என்பதால் ஷாலினி ஒப்புக் கொண்டுள்ளார்.

Shalini Ajith to act after twenty years in a mega movie?

அவரை இயக்க போகும் டைரக்டர் வேறு யாரும் இல்லை. மாதவனுடன் ஷாலினி நடித்த அலைபாயுதே படத்தை இயக்கிய மணிரத்னம் தான் அந்த டைரக்டர். அவர் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் தான் ஷாலினியும் இணைய போகிறாராம்.

மணிரத்னம் கேட்டதால் தான் எந்த தயக்கமும் இன்றி ஷாலினி மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டாராம். ஷாலினி மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு அஜித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமல்ல பிற மொழிகளிலும் ஷாலினி நடிக்க அஜித் ஒப்புக் கொண்டுள்ளாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X