Ajithkumar: உன்னைப் போலே ஆணில்லையே.. நீயும் போனால் நானில்லையே.. அஜித்குமார் ஷாலினி ரீசெண்ட் க்ளிக்ஸ்

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் தம்பதிகள் என்றால் அது, அஜித்குமார் - ஷாலினி தம்பதியர்தான். இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட பழக்கம், காதலாக மாற, அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி, எதிர்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த 25ஆண்டுகளாக இணை பிரியாத தம்பதிகளாக இருவரும் வாழ்ந்து வருவதால், இவர்கள் இருவரையும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகின்றது. இப்படியான நிலையில், அஜித்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

shalini ajithkumar ajithkumar

ஏற்கனவே கூறியதைப்போல், கடந்த 2000ஆம் ஆண்டில் அஜித்குமார் மற்றும் ஷாலினி திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் பணியாற்றியபோது காதலித்தார்கள். இவர்களின் காதல் கதை குறித்து அமர்க்களம் படத்தின் இயக்குநர் சரண் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த வீடியோக்கள் இப்போதும் யூடியூப் தளத்தில் உள்ளது.

shalini ajithkumar ajithkumar

2000த்தில் திருமணம் செய்து கொண்டாலும் இவர்கள் 2008ஆம் ஆண்டுதான் தங்களின் முதல் குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். 2008ஆம் ஆண்டு இவர்களின் முதல் குழந்தை அனோஷ்கா பிறந்தார். அதன் பின்னர் இவர்களுக்கு மகன் பிறந்தார். மகனுக்கு ஆத்விக் என பெயரிட்டுள்ளனர். அனோஷ்காவுக்கு நேற்று, 17வது பிறந்த நாள். அனோஷ்காவின் பிறந்த நாளினை அஜித் குடும்பத்தினர் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடினர். குறிப்பாக, 2025ஆம் ஆண்டினை வரவேற்க வெளிநாட்டிற்குச் சென்ற அஜித் குடும்பத்தினர், அங்கு அனோஷ்காவின் பிறந்த நாளையும் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார்.

shalini ajithkumar ajithkumar

காதல் மன்னன்: அஜித்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருந்த காலகட்டத்தில் இருந்தே அவர் மீது தமிழ் சினிமாவில் இருந்த நடிகைகள் மட்டும் இல்லாமல், ரசிகைகளுக்கும் பெரும் காதல் இருந்தது. குறிப்பாக, அஜித்துக்கு தமிழ் திரையுலகம் காதல் மன்னன் என்று செல்லப்பெயரே வைத்திருந்தார்கள். இப்படியான நிலையில்தான் அஜித்குமார் ஷாலினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

shalini ajithkumar ajithkumar

முக்கியமான ஆண்டு: அஜித்குமாருக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. காரணம், இவரது நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல், ஐரோப்பிய கார் பந்தையத்தில் அஜித்குமார் கார் ரேஸ் என்ற அணியை உருவாக்கி களமிறங்குகின்றார். எனவே இந்த ஆண்டு அஜித்குமாருக்கு மிகவுமே முக்கியமான ஆண்டாக உள்ளது. விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது.

shalini ajithkumar ajithkumar

கமெண்ட்: இப்படியான நிலையில் தனது மகள் பிறந்த நாளில் அவரும் அவரது மனைவி ஷாலினியும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த அஜித் மற்றும் ஷாலினி ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் ஹார்ட்டின்களை வாரி வழங்கி வருகின்றார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X