குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ஃபேமிலி.. திடீரென விசிட் அடித்த திரை பிரபலங்கள்

சென்னை: அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் திரையரங்கில் கண்டு ரசித்து வருகின்றனர். அர்ஜூன் தாஸ் ரசிகர்களுடன் சென்று முதல் காட்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். விடாமுயற்சியை போன்று இல்லாமல் இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனிடையே, இப்படத்தை அஜித்தின் குடும்பம் கண்டு களிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் அஜித், த்ரிஷா, பிரபு, அர்ஜூன் தாஸ், சுனில், பிரசன்னா மற்றும் பலருடன் நடித்துள்ளனர். இப்படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். படத்திற்கான விமர்சனங்களும் கலவையாக வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தை பார்த்த ரசிகர்களும் சமூகவலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் தரமான சம்பவம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

shalini-arrives-at-the-theater-to-watch-the-movie-good-bad-ugly

துப்பாக்கி வசனம்: விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ஐ யம் வெயிட்டிங் என்ற வசனம் உலக அளவில் ஃபேமஸ் ஆனது. இந்த ஒரு வசனம் கத்தி, சர்க்கார் படம் வரை தொடர்ந்தது. குறிப்பாக மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி விஜயிடம் கூறும்போதும் மாஸாக இருந்தது. அதேபோன்று குட் பேட் அக்லி படத்திலும் நடிகர் அஜித் விஜய் வசனத்தை பேசி பட்டையை கிளப்பியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கோட் படத்தில் விஜய் அஜித் பற்றி பேசி ஆச்சர்யத்தை அளித்தார். இதுதொடர்பான காட்சிகளும் இணையத்தில் வைரலானது.

shalini-arrives-at-the-theater-to-watch-the-movie-good-bad-ugly

பிரபலங்கள் வருகை: ஸ்டார் நடிகர் படம் ரிலீஸ் என்றால் அது கொண்டாட்டம் தான். குட் பேட் அக்லி படத்தை காண ரசிகர்களை போன்று திரையுலக பிரபரலங்களும் குவிந்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் முதல் காட்சியை காண வரும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அதேபோன்று இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அர்ஜூன் தாஸூம் முதல் காட்சியை ரசிகர்களுடன் வந்து பார்த்தார். இவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோன்று சீரியல் நடிகர்களும் படத்தை காண குவிந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

ஷாலினி வீடியோ வைரல்: இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தை காண அஜித்தின் மனைவி ஷாலினியும், அவரது மகளும் திரையரங்கிற்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையரங்கிற்குள் இருவரும் அமரும் போது அவருக்கு தியேட்டர் பணியாளர்கள் உதவி செய்வது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. ஷாலினி இதேபோன்று விடாமுயற்சி, துணிவு படத்தின் முதல் காட்சியை காண வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் மீது பேரன்பு கொண்ட ரசிகர்கள் அவரது மனைவியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X