Shalini Birthday - ஷாலினி பிறந்தநாள்.. அஜித்துக்காக ஷாலினி செய்த செயல்.. விடிய விடிய காத்திருந்த இயக்குநர்

சென்னை: Shalini Birthday(ஷாலினி பிறந்தநாள்) நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினிக்கு இன்று 44ஆவது பிறந்தநாள்.

குழந்தை நட்சத்திரமாக ஷாலினி மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். அதன் பிறகு தமிழில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு தொடர்ந்து அமர்க்களம், அலைபாயுதே, கண்ணுக்குள் நிலவு ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

Shalini Birthday Today Here is Unknown Details about Her And Ajith

காதல்: அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அமர்க்களம் படத்தில் கத்தியை வைத்து ஷாலினியை அஜித் மிரட்டுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போது உண்மையாகவே கத்தி ஷாலினியின் கையை கீறிவிட்டது. இதனால் பதறிப்போன அஜித்குமார் உடனே முதலுதவி செய்தார். அன்றைய தின ஷூட்டிங் முடிந்த பிறகு பொக்கே அனுப்பி நலம் விசாரித்தார் அஜித்.

சீக்கிரம் முடிங்க சரண்: அதனைத் தொடர்ந்து ஒருமுறை சரண், ஷாலினி, அஜித் மூன்று பேரும் அமர்ந்திருக்க, 'சரண் சீக்கிரம் ஷூட்டிங்க முடிச்சிடுங்க இல்லைனா நான் ஷாலினிய லவ் பண்ணிடுவேன் போல’ என போட்டு உடைத்திருக்கிறார் அஜித். அப்போதுதான் அஜித்துக்குள் காதல் இருப்பதை ஷாலினி லேசாக உணர்ந்திருக்கிறார்.

திருமணம்: தொடர்ந்து ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது ஒருகட்டத்தில் ஷாலினியிடம் அஜித் காதலை சொல்லிவிட்டார். உள்ளுக்குள் அஜித் மீது ஷாலினிக்கு ஆசை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனது அப்பாவிடம் பேச சொன்னார் ஷாலினி. அதேசமயம் அஜித் பேசுவதற்கு முன்பாகவே ஷாலினியே தனது தந்தையிடம் பேசியிருந்தார். அதனையடுத்து அஜித்தும் நேரடியாக ஷாலினி தந்தையிடம் பேச அவரும் ஒத்துக்கொண்டார். இதனையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.

ஷாலினி செய்த செயல்: இந்த சூழலில் இரண்டு பேரும் காதலித்துக்கொண்டிருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது இரண்டு பேரும் தங்களுக்குள் காதலை சொல்லி ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்ட பிறகு அஜித்துக்கு பிறந்தநாள் வந்திருக்கிறது. அந்த பிறந்தநாளுக்கு பல கிஃப்ட்டுகளை இயக்குநர் சரணிடம் இரவு கொடுத்து அனுப்பினாராம் ஷாலினி.

அந்த சமயத்தில் அஜித்திடம் ஃபோன் இல்லையாம். உடனே சரணின் ஃபோனுக்கு கால் செய்த ஷாலினி அஜித்திடம் கொடுக்க சொல்லி என்னென்ன கிஃப்ட்டுகள் வந்திருக்கின்றன என்பதை அஜித்தை வைத்தே சொல்ல சொன்னாராம். அதன் பிறகு இரண்டு பேரும் விடிய விடிய தங்களது காதல் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசிக்கொண்டே இருந்தனராம். விடிந்தவுடன் காலை 6 மணிக்கு மேல்தான் இரண்டு பேரும் ஃபோனை வைத்தார்களாம். அதுவரை இயக்குநர் சரண் அஜித்தின் ப்ளாட்டில் விழித்துக்கொண்டே காத்திருந்தாராம். இந்தத் தகவலை இயக்குநர் சரண் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

இப்படி தீவிரமாக காதலித்து திருமணம் செய்துகொண்ட இரண்டு பேரும்தான் இன்றுவரை கோலிவுட் காதல் ஜோடிகளில் அதிக ஃபேவரைட்டாக இருப்பது. பிறந்தநாள் வாழ்த்துகள் ஷாலினி..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X